டி. வி. கோபாலகிருஷ்ணன்

திருப்புனித்துறை விசுவநாத கோபாலகிருஷ்ணன் (Tirupanithurai Viswanatha Gopalakrishnan, பரவலாக TVG, பிறப்பு: கேரளத்தின் திருப்புனித்துறையில் சூன் 11, 1932) சென்னையைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை மற்றும் இந்துத்தானி இசைக் கலைஞர்.[1]

டி.வி. கோபாலகிருஷ்ணன்
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூன் 11, 1932 (1932-06-11)
பிறப்பிடம் கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்படப் பாடல்
தொழில்(கள்)பாடகர், கருநாடக இசைக்கலைஞர்

வாழ்க்கையும் பணிவாழ்வும்

கோபாலகிருஷ்ணன் இரண்டு நூற்றாண்டுகளாக இசைத்துறையில் ஈடுபட்ட கலைக்குடும்பதைச் சேர்ந்தவர்.[2] இவரது தந்தை டி. ஜி. விசுவநாத பாகவதர், கொச்சி மகாராசா அவையில் இசைக்கலைஞராக இருந்தவர்.[3] இவர் ஒரு வாய்ப்பாட்டுக்காரர் மட்டுமல்லாது வயலின் மற்றும் மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.[4] மிருதங்கத்தை தமது நான்காவது அகவையிலேயே வாசிக்கத் துவங்கி ஆறாம் அகவையில் திருப்புனித்துறை கொச்சி அரண்மனையில் அரங்கேற்றம் கண்டார்.[5] இவர் தமது கருநாடக இசையை செம்பை வைத்தியநாத பாகவதரிடம் பயின்றார்.[5]

கோபாலகிருஷ்ணன் தனது 9 ஆவது வயதில் செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பக்க வாத்தியம் வாசித்தார்.[6] இதுவே இவரின் முதல் முக்கியமான மேடை நிகழ்ச்சி.

இவரது மாணாக்கர்களாக இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், ராஜ்குமார் பாரதி, மற்றும் கத்ரி கோபால்நாத் இருந்துள்ளனர்.[5][7] மேற்கத்திய விபுணவிகலைஞரும் இசையமைப்பாளருமான பிராங்க்ளின் கீர்மையருடன் நிகழ்கலை நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்து பங்காற்றியுள்ளார்.[8]

விருதுகள்

மேற்கோள்கள்

  1. Massey, Reginald; Marcus Massey (1999). India's kathak dance, past present, future. Abhinav Publications. பக். 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170173744.
  2. Kumar, Raj (2003). Essays on Indian Music. Discovery Publishing House. பக். 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8171417191.
  3. "Profiles of Artistes, Composers, Musicologists". Indian heritage. பார்த்த நாள் 2009-07-28.
  4. "Chembai award for T.V. Gopalakrishnan". தி இந்து. 17 August 2005. http://www.hindu.com/2005/08/17/stories/2005081709750400.htm. பார்த்த நாள்: 2009-07-28.
  5. Jayakumar, G. (2 September 2005). "A maestro's music". தி இந்து. http://www.hinduonnet.com/thehindu/fr/2005/09/02/stories/2005090201460200.htm. பார்த்த நாள்: 2009-07-28.
  6. 'குருவின் ஆசி' - ரமா ஈச்வரன் எழுதிய கட்டுரை, வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2011 - 2012)
  7. Rajan, Anjana (12 January 2007). "A time to every purpose". தி இந்து. http://www.hindu.com/fr/2007/01/12/stories/2007011201040200.htm. பார்த்த நாள்: 2009-07-28.
  8. "Pop and Jazz Guide". நியூ யார்க் டைம்சு. 21 May 2004. http://www.nytimes.com/2004/05/21/movies/pop-and-jazz-guide-668117.html?pagewanted=2. பார்த்த நாள்: 2009-07-28.
  9. தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் புதுவை விவசாயிக்கு பத்மஸ்ரீ தினமணி, சனவரி 26,2012
  10. ‘Naada Kovida’ title for T.V. Gopalakrishnan, தி இந்து, டிசம்பர் 15,2014

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.