முசிறி சுப்பிரமணிய ஐயர்

முசிறி சுப்ரமணிய ஐயர்[1] (ஆங்கிலம்:Musiri Subramania Iyer ஏப்ரல் 9, 1899 - மார்ச் 25, 1975) ஒரு கர்நாடக இசைப் பாடகர், இவரின் மேடை நிகழ்ச்சிகள் 1920 முதல் 1940 வரை பரவியிருந்தது. இசைக் கச்சேரிகள் செய்வதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் கர்நாடக இசை கற்பிக்கும் ஆசிரியராவும், கர்நாடக இசை சமூகத்தில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார்.

முசிறி சுப்பிரமணிய ஐயர்
முசிறி சுப்ரமணிய ஐயர் தனது சீடருடன்
பிறப்பு9 ஏப்ரல் 1899
பொம்மலபாளையம், திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு25 மார்ச்சு 1975(1975-03-25) (அகவை 75)
பணிகர்நாடக இசைப் பாடகர்
பெற்றோர்சங்கர சாஸ்த்ரி, சீதாலட்சுமி
வாழ்க்கைத்
துணை
நாகலட்சுமி

வாழ்க்கை வரலாறு

இவர் 1899 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை சங்கரா சாஸ்திரி ஒரு சமஸ்கிருத வல்லுநர். தனக்கு 14 வயதாக இருக்கும் போது நாகலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.[2] அவர் 17 வயதில் ஆங்கிலம் சரளமாகப் பேச, படிக்க, எழுதக் கற்றுக்கொண்டார்.

ஆரம்ப காலத்தில், இசைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகளுக்கு எஸ். நாராயணசுவாமி ஐயரிடம் கற்றார். பின் கரூர் சின்னசுவாமி ஐயர் மற்றும் டி. எஸ். சபேச ஐயர் ஆகியோரிடமிருந்து இருந்து இசை கற்று, 19 வயதில் தனது முதல் கச்சேரியில் பாடினார்.

இசைப் பணி

இவரின் மாணவர்கள்

  1. டி. கே. கோவிந்தராவ்
  2. மணி கிருஷ்ணஸ்வாமி
  3. பம்பாய் சகோதரிகள்
  4. சுகுணா புருசோத்தமன்
  5. சுகுணா வரதாச்சாரி

வகித்த பதவிகள்

  • 1949-1965 சென்னை மத்திய கர்நாடக இசை கல்லூரி முதல்வர்
  • ஸ்ரீ தியாகராஜர் பிரம்ம மகோத்வ சபா கவுரவ செயலாளர் மற்றும் பொருளாளர்

விருதுகள் மற்றும் பட்டங்கள்

மேற்கோள்கள்

  1. "ஊரும் பேரும்". தினமணி (31 டிசம்பர், 2016)
  2. "Musiri for bhava". தி இந்து (24-04-2006). பார்த்த நாள் 9-04-2017.
  3. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
  4. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (23 டிசம்பர் 2018). பார்த்த நாள் 23 டிசம்பர் 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.