நானா படேகர்

நானா படேகர் (மராத்தி: नाना पाटेकर) (விஷ்வநாத் படேகராக 1 ஜனவரி 1951 அன்று பிறந்தார்) மிகவும் பாராட்டப்படும் இந்திய நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.

நானா படேகர்

இயற் பெயர் விஸ்வநாத் படேகர்
பிறப்பு சனவரி 1, 1951 (1951-01-01)
முருத், ராய்காட் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
தொழில் திரைப்பட இயக்குனர் & நடிகர்
நடிப்புக் காலம் 1978 முதல் – தற்பொழுது வரை
துணைவர் நீலகண்டி படேகர்
பெற்றோர் தங்கர் படேகர்
சங்கனா படேகர்

வாழ்க்கை வரலாறு

மகாராஷ்டிராவில் உள்ள முருத்-ஜாஞ்ஜிராவில், தினகர் படேகர் (ஓவியர்) மற்றும் அவரது மனைவி சஞ்சனா பாய் படேகருக்கு விஷ்வநாத் படேகர் மகனாகப் பிறந்தார். அவர் மும்பையில் உள்ள சர் ஜெ. ஜெ. இன்ஸ்டிட்யூட் ஆஃப் அப்லைடு ஆர்ட்ஸின் முன்னாள் மாணவர் ஆவார். அவரது கல்லூரி நாட்களின் போது தனது கல்லூரிகளுக்குள் நடைபெறும் நாடகங்களில் பங்கு பெற்றார். பட்டம் முடித்த பிறகு அவர் பல பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவற்றில் சில பாலிவுட்டில் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்களின் படங்கள் ஆகும். அவர் நீலாகாந்தியை மணந்து, அவர்களுக்கு மல்ஹர் என்ற மகன் இருக்கிறார்.

தொழில் வாழ்க்கை

நானா படேகர் தனித்த நடிப்புப் பாணியை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தனது துடுக்கான பாணியில் வெளிப்படுத்தும் வசனங்களால் நன்கு அறியப்படுகிறார். மேலும் அவரது பேசும் விதம் அவர் வரிகளை விநியோகிப்பதைப் பிரதிபலிக்கிறது. அவர் தனது அனைத்து வரிகளையும் எந்த முன் ஆயத்தமின்றிப் பேசுவதாகப் பரவலான வதந்தி நிலவுகிறது. அவர் ஏழைகளுக்குத் தாராளமாய் வழங்கக் கூடியவர் எனவும் அறியப்படுகிறார்.[1][2] அவர் மாதிரிச் சித்திர ஓவியராகவும் இருக்கிறார். சில நேரங்களில் அவரது ஓவியங்கள் மும்பைக் காவல் துறைக்கு குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும் உதவியாய் இருக்கின்றன.

அவர் மொஹ்ரே (1987) மற்றும் சலாம் பாம்பே! (1988) போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும் அவர் 1989 ஆம் ஆண்டு பாரிண்டா திரைப்படத்தில் வில்லனாகப் பாத்திரமேற்றிருந்ததில் பாலிவுட் துறையின் முக்கியமானவர்களால் கவனிக்கப்பட்டார். அவர் அந்த பாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டார். அவர் 1992 ஆம் ஆண்டில் ஆங்கார் திரைப்படத்துக்காகவும் ஃபிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது பெற்றார்.

ஆல் தக் சாப்பான் (2005) திரைப்படத்தில் நிழலுலக தாதாக்களை ஒழிப்பதை முக்கியப் பணியாகக் கொண்ட காவல்துறை அதிகாரியாக அவர் நடித்திருந்தார். 1994 ஆம் ஆண்டில் அவர் கிராண்டிவீர் (1994) படத்தில் அவரது நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளை வென்றார். மேலும் அவர் சிறந்த நடிகர் பிரிவில் ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் ஆகியவற்றையும் வென்றார்.

படேகர் பலவகையான பாத்திரங்களில் நடிக்கிறார். அவர் எப்போதாவது வில்லானாக நடித்தாலும் பெரும்பாலான அவரது திரைப்படங்களில் கதாநாயகனாகவே நடித்திருக்கிறார். அவர் கிராண்டிவீர் (1994) படத்தில் ஒரு சோம்பேறியான சூதாடி மகனாகவும், அக்னி சாக்ஷி (1996) படத்தில் மனைவியை அடித்துத் துன்புறுத்துபவராகவும், கமோஷி: த மியூசிக்கல் (1996) படத்தில் மனிஷா கொய்ராலாவின் காது கேட்காத மற்றும் வாய்ப் பேச முடியாத தகப்பனாராகவும் (அச்சமயம் திரைக்கப்பால் இருவரும் காதலர்களாக இருந்தனர்) மற்றும் வாஜூத் (1998) படத்தில் புத்தி பேதலித்தவராகவும் நடித்திருந்தார். மேலும் அவர் சில வில்லத்தனமான பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். படேகர் சமீபத்தில் வெல்கம் (2007) திரைப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்திலும் நடித்தார். அதில் அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் கொண்டிருந்த ஆற்றல்மிக்க குற்றத் தலைவனாக நடித்திருந்தார்.

அவர் மாதுரி தீக்சித்துடன் இணைந்து-நடித்த பிராஹார்: த ஃபைனல் அட்டாக் படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறினார். ஒரு நடிகராக அவரது மற்ற திரைப்படங்கள் ஹூ டூ டூ மற்றும் பிளஃப் மாஸ்டர் உள்ளிட்டவையும் அடங்கும். அபாரன் படத்தில் அவரது நடிப்புக்காக ஃபிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது மற்றும் சிறந்த வில்லனுக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளைப் பெற்றார். அவர் அடுத்து சங்கீத் ஷிவனின் தெலுங்குப் படமான அத்தடு(2005) படத்தின் மறு தயாரிப்பில் நடித்தார். மேலும் அதில் அவரது பாத்திரமான ஆஞ்சனேய பிரசாத்தின் (CBI அதிகாரி) அசல் பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார்.

யஷ்வந்த் (1997), வாஜூத் (1998) மற்றும் ஆன்ச் (2003) ஆகிய திரைப்படங்களில் படேகர் பின்னணிப் பாடல்களும் பாடியிருக்கிறார்.

அவர் இந்திய இராணுவத்தில் கெளரவ கேப்டன் தரத்தையும் கொண்டிருக்கிறார். அவர் பிரஹார் திரைப்படத்தில் அவரது பாத்திரமான இராணுவ அதிகாரி வேடத்திற்காக மிகவும் கடினமான பயிற்சி மேற்கொண்டதால் அவருக்கு அந்தத் தரம் கிடைத்தது. அவர் 90களின் ஆரம்பத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு இராணுவத்தில் (இந்தியா) சேர்ந்தார். அவர் தனது 54 வயதில் துப்பாக்கி சுடுதலை மேற்கொண்டார். அவர் ஜி.வி. மால்வாங்கர் சேம்பியன்ஷிப்புகளுக்குத் தேர்வாகியிருக்கிறார்.[3]

விருதுகள்

  • 1990: சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது, பாரிண்டா
  • 1990: சிறந்த துணை நடிகருக்கான தேசியத் திரைப்பட விருது, பாரிண்டா
  • 1992: ஃபிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது, ஆங்கார்
  • 1995: ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகர் விருது, கிராண்டிவீர்
  • 1995: சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது, கிராண்டிவீர்
  • 1995: சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது, கிராண்டிவீர்
  • 1997: சிறந்த துணை நடிகருக்கான தேசியத் திரைப்பட விருது, அக்னி சாக்ஷி
  • 2004: BFJA விருதுகள், சிறந்த நடிகர், ஆப் தக் சாப்பன் [4]
  • 2006: ஃபிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது, அபாரன்
  • 2006: சிறந்த வில்லனுக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது, அபாரன்

இதுவரை சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த வில்லன் ஆகிய பிரிவுகளின் கீழ் ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கிய ஒரே நடிகர் படேகர் மட்டுமே ஆவார்.[5]

திரைப்படப் பட்டியல்

நடிகர்

  • காமான் (1978) ... வாசு
  • ஆங்குஷ் (1986) ... ரவீந்த்ரா கெல்கர் 'ரவி'
  • Lord Mountbatten: The Last Viceroy (1986) ... நாதுராம் கோட்சே
  • பிரதிகாத் (1987) ... முன்னாள்-காவலர் கரம்வீர்
  • சலாம் பாம்பே (1988) ... பாபா
  • த ஜங்கில் புக் (இந்தி) (1990கள்)... ஷெரே கான் (குரல்)
  • பாரிண்டா (1990) ... அண்ணா சேத்
  • தோடசா ரூமானி ஹோ ஜாயேன் (1990) ... நட்வர்வால் அக்க துர்ஷ்டடையும்னா பத்மநாப பிரஜாபதி நீல்கண்ட் தூம்கேது பாரிஷ் கார்
  • பிரஹார்: த ஃபைனல் அட்டாக் (1991) ... மேஜர் சவ்ஹான்
  • டிக்ஷா (1991) ... கோகா பண்டிக்
  • டிரங்கா (1992) ... ஷிவாஜிராவ் வேகல்
  • ராஜு பான் க்யா ஜெண்டில்மேன் (1992) ... ஜெய்
  • அங்கார் (1992) மஜித் கான்
  • க்ராந்திவீர் (1994) பிரதாப் நாராயண் திலக்
  • ஹம் தோனோ (1995) ... விஷால் சைகல்
  • அக்னி சாக்ஷி (1996) ... விவி விஸ்வநாத்
  • கமோஷி: த மியூசிக்கல் (1996) ... ஜோசப் பிரகான்சா
  • குலாம்-ஈ-முஸ்தபா (1997) ... குலாம்-இ-முஸ்தபா
  • யஷ்வந்த் (1997) ... யஷ்வந்த் லோஹர்
  • யக்புருஷ்: எ மேன் ஹூ கம்ஸ் ஜஸ்ட் ஒன்ஸ் இன் அ வே (1998) ... அனிருத்
  • வாஜூத் (1998) ... மல்ஹார் கோபால்தாஸ் அக்னிஹோட்ரி/கோல். லாட்டி
  • ஹூ டூ டூ (1999) ... பாயு
  • கோஹ்ரம்: த எக்ஸ்புளோசன் (1999) ... மாஜ். அஜித் ஆர்யா
  • கேங்க் (2000) ... அப்துல்
  • டார்கைப் (2000) ... CBI இன்ஸ்பெக்டர் ஜாஸ்ராஜ் படேல்
  • வாத் (2002) ... டாக்டர். அர்ஜூன் சிங்
  • ஷக்தி - த பவர் (2002) ... நரசிம்மா
  • பூட் (2003)... இன்ஸ்பெக்டர் லியாகத் குரெஷி
  • டர்னா மனா ஹாய் (2003) ... ஜான் ரோட்ரிகஸ்
  • ஆண்ச் (2003)
  • ஆப் தக் சாப்பன் (2004) ... இன்ஸ்பெக்டர் சாதூ அகாஷே
  • அபஹரன் (2005) ... தப்ரேஸ் ஆலம்
  • பக் பக் பகாக் (2005)...(பூட்யா)(மராத்தி திரைப்படம்)
  • பிளஃப் மாஸ்டர் (2005) ... சந்த்ரு பாரெக்
  • டாக்ஸி நம்பர் 9211 (2006) ... ராகவ் ஷாஸ்த்ரி
  • ஹேட்ரிக் (2007) ... மருத்துவர்
  • டஸ் கஹானியான் (2007) ... பஸ்ஸில் இருக்கும் மனிதன்
  • வெல்கம் (2007) ... டான் உதய் ஷெட்டி
  • யாத்ரா (திரைப்படம்) (2007) ... டாஸ்ரத் ஜோக்லேகர்
  • சாம்னா (2006) (அறிவிக்கப்பட்டது) ... குரு
  • த பூல் (2007)
  • எக் - த பவர் ஆஃப் ஒன் (2008) ... CBI அதிகாரி கிரிஷ் பிரசாத்
  • இட்'ஸ் மை லைஃப் ...
  • பொம்மலாட்டம்
  • பாத்ஷாலா

இயக்குநர்

  • பிரஹார்: த பைனல் அட்டாக் (1991)

குறிப்புகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.