ஓம் பூரி
சர் ஓம் பூரி (Sir Om Puri, இந்தி: ओम पुरी, அக்டோபர் 18, 1950 - சனவரி 6, 2017) வழக்கமான இந்தியத் திரைப்படங்களிலும் மாறுபட்ட கலைப்படங்களிலும் பங்காற்றியுள்ள ஓர் இந்திய நடிகர். இவர் பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஓம் பூரி Om Puri | |
---|---|
![]() 2010 டொரோண்டோ பன்னாட்டு திரைப்பட விழாவில் பூரி | |
பிறப்பு | ஓம் பிரகாசு பூரி அக்டோபர் 18, 1950 அம்பாலா, அரியானா, இந்தியா |
இறப்பு | 6 சனவரி 2017 66) மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1972–2017 |
வாழ்க்கைத் துணை | சீமா கபூர் (1991–1991) நந்திதா பூரி (1993–2013) |
பிள்ளைகள் | இசான் பூரி |
விருதுகள் | பத்மசிறீ |
துவக்க வாழ்க்கை
ஓம் பூரி அரியானாவின் அம்பாலா நகரில் 1950இல் பிறந்தார். புனேயில் உள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1973ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியிலும் பயின்றார். அங்கு இவருடன் உடன் மாணவராக நசிருதீன் ஷா பயின்றுள்ளார்.[1]
சான்றுகோள்கள்
- Puri, Nandita (2005-01-18). "Brothers-in-arms". Mid-Day Multimedia Ltd.. மூல முகவரியிலிருந்து 2005-02-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2005-05-27.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.