நானம்மாள்

நானம்மாள் (24 பெப்ரவரி 1920 – 26 அக்டோபர் 2019) கோவையைச் சேர்ந்த 98 வயதான இப்பாட்டி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வந்ததோடு, அதனைப் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் பணியிலும் இருந்தவர். இவரது யோகக் கலையைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெண் சக்தி விருதை (ஸ்தீரி சக்தி புரஸ்கார்) பெற்றிருக்கும் நானம்மாள், இந்தியாவின் மிக வயதான யோகாசன ஆசிரியர் ஆவார். [1]

நானம்மாள்
V. Nanammal
2018 இல் நானம்மாள்
பிறப்புபெப்ரவரி 24, 1920(1920-02-24)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு26 அக்டோபர் 2019(2019-10-26) (அகவை 99)
கோயம்புத்தூர்
தேசியம்இந்தியர்
பணியோகக் கலை பயிற்சியாளர்
விருதுகள்
  • நாரி சக்தி புரசுக்கார் (2016)
  • யோகா இரத்னா விருது (2017)
  • பத்மசிறீ விருது (2018)

யோகாசனப் பயிற்சி

கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிக்கும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டில் வேளாண்மைக் குடியில் பிறந்தவர். தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள், அந்தப் பயிற்சியை 90 ஆண்டுகளுக்குப் பிறகும் விடவில்லை.[2]

குடும்பம்

ஞானம்மாளின் கணவர் சித்த வைத்தியர் ஆவார். இவ்விணையருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். ஒட்டுமொத்தமாக 11 கொள்ளுப்பேரன் – பேத்திகள் உள்ளனர். ஏறத்தாழ 80 ஆண்டுகளாக யோகா பயிற்சியைச் செய்துவரும் நானம்மாளின் குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் தற்போது யோகாசனத்தைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். [3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 98 வயதிலும் வில்லாய் வளையும் யோகாசன குரு
  2. முகம் நூறு: தள்ளாத வயதிலும் தளராத யோகா
  3. தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் 97 வயது பாட்டி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.