விவேக் (நகைச்சுவை நடிகர்)

விவேக் (ஆங்கிலம்:Vivek) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1961 நவம்பர் 19 ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மதுரையில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.[1] இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

விவேக்

விவேக்
புனைப்பெயர் சின்னக் கலைவாணர்,
சனங்களின் கலைஞன்
பிறப்பு நவம்பர் 19, 1961 (1961-11-19)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத் துணை அருள்செல்வி

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.

இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.[2]

விருதுகள்

விஜய் விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

தமிழக அரசு விருதுகள்

மற்ற விருதுகள்

  • சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்
  • சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்
  • சிறப்பு சான்றாயர் விருது - ஏசியாநெட் திரைப்பட விருதுகள்
  • சிறந்த ஆண் நகைச்சுவை விருது - எடிசன் விருதுகள்
  • சிறப்பு நகைச்சுவை விருது – கொடைக்கானல்
    பண்பலை வானொலி விருதுகள்
  • சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – ஜ.டி.எஃப்.ஏ (ITFA)

நன்மதிப்பு

திரைப்படங்கள்

நடிகராக

1980 ஆண்டுகளில்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1987மனதில் உறுதி வேண்டும்அறிமுகம்
1989புதுப்புது அர்த்தங்கள்விட்டல்

1990 ஆண்டுகளில்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1990ஒரு வீடு இரு வாசல்
புது மாப்பிள்ளை
கேளடி கண்மணி
1991இதயவாசல்
புத்தம் புது பயணம்
ஜென்ம நட்சத்திரம்
எம் ஜி ஆர் நகரில்
அன்பு சங்கிலி
இதய ஊஞ்சல்
நண்பர்கள்
1992வெற்றிமுகம்
உரிமை ஊஞ்சலாடுகிறது
தம்பி பொண்டாட்டி
கிழக்கு வீதி
கலி காலம்
புதுசா படிக்கிறேன்
இன்னிசை மழை
1993உழைப்பாளி
பாஸ் மார்க்
பட்டுக்கோட்டை பெரியப்பா
1994வீரா (1994)
புதிய மன்னர்கள்
வாச்மென் வடிவேல்
வனஜா கிரிஜா
வா மகளே வா
வாங்க பாட்னார் வாங்க
நம்ம அண்ணாச்சி
பொங்கலோ பொங்கல்
எங்க முதலாளிபாண்டுரங்கன்
1995நந்தவனத் தெரு
மாயாபஜார் 1995
தாயகம்
தொட்டில் குழந்தை
முத்துக் குளிக்க வாரீயளா
இளைய ராகம்சாமி
காந்தி பிறந்த மண்
பெரிய இடத்து மாப்பிள்ளை
1996காலமெல்லாம் காதல் வாழ்க
மைனர் மாப்பிள்ளைகிச்சா
அவதாரப் புருசன்
எனக்வொரு மகன் பிறப்பான்
சுபாஷ்
1997நேருக்கு நேர்
தினமும் என்னைக் கவனிபாலராமன்
பகைவன்
சிஷ்யா
பெரிய இடத்து மாப்பிள்ளை ராமு
1998காதல் மன்னன்
மறுமலர்ச்சிநாகராஜன்
காதலே நிம்மதி
உன்னுடன்
சொல்லாமல்
கண்ணெதிரே தோன்றினாள்
அரிச்சந்திரா
நாம் இருவர் நமக்கு இருவர்பார்த்தசாரதி
1999நினைவிருக்கும் வரை
பூமகள் ஊர்வலம்சக்தி
வாலிவிக்கி
ஒருவன்
விரலுக்கேத்த வீக்கம்ராமனாதன்
உனக்காக எல்லாம் உனக்காகமதி
முகம்
அதான்டா இதான்டாபுண்ணியகோடி
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
உன்னருகே நானிருந்தால்வெற்றி: சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருது
ஆசையில் ஒரு கடிதம்ராமலிங்கம்

2000'களில்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் அடிக்குறிப்புகள்
2000திருநெல்வேலி
ஏழையின் சிரிப்பில்அரசு
சுதந்திரம்சுர்புரா
தை பொறந்தாச்சுகுட்டி
முகவரிரமேசு
அலைபாயுதே
சந்தித்த வேளை
கந்தா கடம்பா கதிர்வேலா
குஷிவிக்கி
கரிசக்காட்டு பூவே
பெண்ணின் மனதை தொட்டுகந்தசாமி
டபுள்ஸ்
உன்னைக் கண் தேடுதே
பட்ஜெட் பத்மநாபன்கிருஷ்ணன்
கண்டேன் சீதையை
பாளையத்து அம்மன்கல்யாணராமன்
ப்ரியமானவளே
சீனு
2001லூட்டிதியாகராஜன்
நாகேஸ்வரி
மின்னலேசொக்கலிங்கம்
எங்களுக்கும் காலம் வரும்சந்தோஷ்
குட்டி
உள்ளம் கொள்ளை போகுதே
டும் டும் டும்ஜிம்
சூப்பர் குடும்பம்ஹரி
பத்ரிஅழகு
மிடில் கிளாஸ் மாதவன்மணிமாறன்
லவ்லிஅழகேஷ் (அல் கேட்ஸ்)
தில்'மெகாசீரியல்' மாதவன்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்
விஸ்வநாதன் ராமமூர்த்திராமமூர்த்தி
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
பூவெல்லாம் உன் வாசம்வரதன்
அள்ளித் தந்த வானம்தமிழ் கிறுக்கன்
12 பிமதன்
ஷாஜகான்பூபதி
மனதைத் திருடி விட்டாய்வளையாபதி
பார்த்தாலே பரவசம்
மஜ்னுமனோ
வடுகப்பட்டி மாப்பிள்ளை
2002விவரமான ஆளு'சூட்கேஸ்' சுப்பு
அழகிடாக்டர் தேசிங்கு
ரோஜாக்கூட்டம்ஆறுமுகம்
தமிழன்நந்தகுமார்
கோட்டை மாரியம்மன்
தென்காசிப்பட்டணம்மாணிக்கம் பிள்ளை என்ற மாப்பிள்ளை
ஷக்கலக்க பேபி
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கேசுப்பு
யூத்கருத்து கந்தசாமி
ரன்மோகன்வெற்றி, சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது
வெற்றி, தமிழக அரசின் சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது
வெற்றி, ஐ. டி. எப். ஏ. சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது
நம்ம வீட்டு கல்யாணம்
யுனிவர்சிட்டி'ஆல்தோட்ட' பூபதி
காதல் வைரஸ்புதிர்
2003காதல் சடுகுடு'சூப்பர்' சுப்பு
பாப் கார்ன்
சாமிவெங்கட்ராமன்வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
வெற்றி, ஐ. டி. எப். ஏ. சிறந்த நகைச்சுவை நடிகர் விருது
அன்பே அன்பே
பார்த்திபன் கனவுமனோவெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருது
லேசா லேசாசந்துரு
விசில்சகாதேவன்
ஐஸ்புலிகேசி
காதல் கிசு கிசுதமிழ் செல்வன்
தித்திக்குதே'பஞ்ச்' பாலா
த்ரீ ரோஸஸ்சங்கர்
தென்னவன்'தாதா' மணி
தூள்நாராயணசுவாமி (நரேன்)
பாய்ஸ்சுந்தரம் (மங்களம் சார்)
அலைமதன்
திருமலைபழனி
எனக்கு 20 உனக்கு 18கபில்
ஜூட்சிவா
2004உதயாபஷீர்
எதிரி'ஆட்டோ' சம்பத்
பேரழகன்குழந்தைவெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
செல்லமேஹரிச்சந்திரா
அரசாட்சி
எம். குமரன் தா/பெ மகாலஷ்மிகணேஷ்
2005தக திமி தாவிவேக்
கனா கண்டேன்சிவராமகிருஷ்ணன்
அந்நியன்சாரிவெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருது
அன்பே வா
வணக்கம் தலைவாஏரிச்சாமி
2006சரவணாவி. சி. தாமோதரன்
ஆதிபுல்லட்வெற்றி, விஜய் விருதுகள் - சிறந்த நகைச்சுவை நடிகர்
பரமசிவன்அக்னிபுத்திரன்
மதராசிபாண்டி
கள்வனின் காதலி
திருட்டு பயலேயோகராசா
மதுமதன்
நீ வேணும்டா செல்லம்ரேணிகுண்டா ரெட்டி
ஜாம்பவான்டாக்டர் சுபாஷ்
2007ஆழ்வார்பொன்ஸ்
அகரம்
சிவாஜிஅறிவுவெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருது
துள்ளல்முத்து
வீராப்புரத்தன்
கிரீடம்
உற்சாகம்அய்யனார்குடி ராஜா
பசுபதி மே/பா ராசக்காபாளையம்தாஸ்
2008தூண்டில்மேக்
சண்டைமணி, நாட்டாமை
சிங்கக்குட்டிபாலு
குருவிஆப்ஸ்வெற்றி, ITFA சிறந்த நகைச்சுவை நடிகர் விருது
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
ஆயுதம் செய்வோம்கந்தசாமி
ஜெயம் கொண்டான்கோபால்
துரை'அறுசுவை' அம்பி
பொம்மலாட்டம்மதுரை
2009படிக்காதவன்'அசால்ட்' ஆறுமுகம்பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
பெருமாள்இடிதாங்கி, இந்திராசேனா ரெட்டி
1977பரமன்
குரு என் ஆளுஅழகப்பன்வெற்றி, எடிசன் விருதுகள் - சிறந்த நகைச்சுவை நடிகர்
இந்திர விழா'ஒப்பிலா' மணி
ஐந்தாம் படைதாந்தோணி
அந்தோனி யார்?கிங்பிஷர்

2010 ஆண்டுகளில்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2010தம்பிக்கு இந்த ஊரு'சோல' குமார்
சிவப்பு மழை
மகனே என் மருமகனே'சிங்கபட்டி' சிங்காரம்
சிங்கம்'ஏட்டு' எரிமலை
பெண் சிங்கம்திருப்பதி
பலே பாண்டியாலண்டன்
வாடாஎம்.ஆர்.ராதா கிருஷ்னா
உத்தம புத்திரன்ஏகாம்பரம்
2011சீடன்கிம்பிடி சாமி
பவானி ஜபிஎஸ்கிரிவலம்
மாப்பிள்ளைகுழந்தை சின்னா
ஒரு நுனாக்காதஇன்ஸ்பக்டர் சிங்கம்மலையாளம் திரைப்படம்
வெடிவருன் சன்தோஸ்
2014வேலையில்லா பட்டதாரிஅழகுசுந்தரம்
2015என்னை அறிந்தால்

தயாரிப்பில்

எண் திரைப்படம் குறிப்புகள்
1கந்தாதயாரிப்பில்
2நான்காம் முறைதயாரிப்பில்
3கடமை கன்னியம் கட்டுப்பாடு தயாரிப்பில்
4நல்வரவுதயாரிப்பில்
5சித்திரம்தயாரிப்பில்
6வழிப்போக்கன்தயாரிப்பில், கன்னடம்
முதல் முறை வில்லனாக
7இத்தனை நாளாய் எங்கிருந்தாய்தயாரிப்பில்
8இளமை இதோ இதோதயாரிப்பில்
9சொல்லி அடிப்பேன்தாமதம்

மேற்கோள்கள்

  1. தி இந்து நடிகர் விவேக்கின் தந்தை மரணம் 26.நவம்பர்.2014
  2. http://in.news.yahoo.com/43/20090126/812/tnl-list-of-padma-awardees.html
  3. 51st Annual Manikchand Filmfare Award winners – Times Of India. Articles.timesofindia.indiatimes.com (2004-06-04). Retrieved on 2012-02-05.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.