கேளடி கண்மணி
கேளடி கண்மணி என்பது 1990ஆவது ஆண்டில் வசந்த் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபல இந்திய பின்னணிப் பாடகரான எஸ். பி. பாலசுப்ரமணியம் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ராதிகா, ரமேஷ் அரவிந்த், கீதா, விவேக் ஆகியோர் இதர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசந்த் இயக்கிய முதல் திரைப்படமான இது 200 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படமாகும்.
கேளடி கண்மணி | |
---|---|
இயக்கம் | வசந்த் |
தயாரிப்பு | ஏ. சுந்தரம் |
கதை | வசந்த் |
இசை | இளையராஜா |
நடிப்பு | எஸ். பி. பாலசுப்ரமணியம் ராதிகா கீதா ஜனகராஜ் அஞ்சு ரமேஷ் அரவிந்த் விவேக் பூர்ணம் விஸ்வநாதன் |
ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | விவேக் சித்ரா புரொடக்சன்சு |
விநியோகம் | விவேக் சித்ரா புரொடக்சன்சு |
வெளியீடு | 27 சூலை 1990 |
ஓட்டம் | 147 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹6.7 கோடி |
நடிகர்கள்
தயாரிப்பு
கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வசந்த் இந்த திரைப்படத்தின் வாயிலாகவே தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.[1] இப்படத்தில் ராதிகா அழும் காட்சியே, தான் இயக்கிய முதலாவது காட்சி என்று வசந்த் கூறுகிறார்.[2]
பெற்ற விருதுகள்
- 1990 – சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது – ராதிகா
- 1990 – தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த திரைப்படம் (இரண்டாவது இடம்)
- 1990 – தமிழக அரசு திரைப்பட விருதுகள் (சிறந்த பாடலாசிரியர்) – வாலி
- 1990 – தமிழக அரசு திரைப்பட விருதுகள் (சிறந்த பின்னணி பாடகர்) – எஸ். பி. பாலசுப்ரமணியம்
பாடல்கள்
இப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார்.[3]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | என்ன பாடுவது | எஸ். பி. பாலசுப்ரமணியம், இளையராஜா | 04:43 | |
2 | கற்பூர பொம்மை ஒன்று | பி. சுசீலா | மு. மேத்தா | 04:45 |
3 | மண்ணில் இந்த காதலின்றி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | வரதராஜன் | 04:13 |
4 | நீ பாதி நான் பாதி | கே. ஜே. யேசுதாஸ், உமா ரமணன் | வாலி | 04:40 |
5 | தண்ணியிலே நனைஞ்சா | உமா ரமணன் | 04:41 | |
6 | தென்றல் தான் | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | வாலி | 04:41 |
7 | வாரணம் ஆயிரம் | எஸ். ஜானகி | 02:45 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.