நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் (பிறப்பு: 2 ஏப்ரல் 1924) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இந்தியா முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
வாழ்க்கை
இவரின் தந்தை பெயர் காத்தாசாமி பிள்ளை. தாய் குஞ்சம்மாள். நாமகிரிப்பேட்டை அரசினர் பள்ளியில் பயின்றவர்.
இசை
நாதசுவரம் வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி ரசிகர்களை கவர்ந்தவர். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் பாட்டனார் சின்னப்ப முதலியாரிடம் நாதசுவரமும், வாய்ப்பாட்டும் கற்றார். பின் அருப்புக்கோட்டை கணேசனிடம் முறைப்படி நாதசுவரம் பயின்றார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாதசுவரக் கச்சேரிகளை ஏராளமாக நிகழ்த்தியுள்ளார். [1]
விருதுகள்
- கலைமாமணி விருது, 1972
- பத்மசிறீ விருது, 1981[2]
- சங்கீத நாடக அகாதமி விருது, 1981[3]
- இசைப்பேரறிஞர் விருது, வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[4]
ஏனைய சிறப்புகள்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் ‘ஆஸ்தான சங்கீத வித்வானாக’ 1977 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
- தினமணி தீபாவளி மலர்,1999, பக்கம்125
- "Padma Awards Directory (1954–2013)". இந்திய அரசின் உள்துறை அமைச்சகம்.
- SNA Awardees list (Instrumental – Nagaswaram)
- "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.