தென்னவன்

தென்னர், தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன.

பாண்டிய மன்னர்கள் செழியன், சேய், பஞ்சவன், மாறன், வழுதி என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

'தென்' என்னும் சொல் தென்-திசையைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் இனிமை என்னும் பொருளையும் உணர்த்தும். :தேங்காய் = இனிய காய். தேங்காய் உள்ளது தென்னை. இதில் 'தென்' என்பது இனிமைப் பொருளைத் தருவதைக் காணலாம். இந்த வகையில் தென்னவர் என்னும் சொல் இனியவர் என்னும் பொருளையும் தரும்.

தென் திசையிலிருந்து வடக்கு நோக்கித், தென்மதுரை, கபாடபுரம், வடமதுரை எனக் குடிபெயர்ந்தவர் ஆதலால் இவர்களைத் தென்னவர் என்றனர்.

குடநாடு எனப்பட்ட மேற்குத்திசை சேரநாட்டை ஆண்ட மன்னன் குடவர் கோமான் என்று பெயர் கொண்டது போன்றது இது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.