மாரி (திரைப்படம்)

மாரி (Maari) என்பது 2015இல் வெளிவந்த ஓர் அதிரடி நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] பாலாசி மோகன் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.[2] இத்திரைப்படத்தில் தனுஷ், காசல் அகர்வால் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.[3] மேஜிக் ப்ரேம்ஸ், உவொண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை ஆக்கியுள்ளன.[4] திரைப்படத்திற்கான இசையை அனிருத் இரவிச்சந்தர் வழங்கியுள்ளதுடன், ஓம் பிரகாசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.[5] 2015 சூலை 17ஆம் நாள் மாரி வெளிவந்தது.[1]

மாரிராஐ
திரைப்படத்தின் சுவரொட்டி
இயக்கம்பாலாசி மோகன்
தயாரிப்புஇலிசுட்டின் தீபன்
சரத்துகுமார்
இராதிகா சரத்துகுமார்
கதைபாலாசி மோகன்
இசைஅனிருத் இரவிச்சந்தர்
நடிப்புதனுசு
காசல் அகர்வால்
விசய் இயேசுதாசு
உரோபோ சங்கர்
ஒளிப்பதிவுஓம் பிரகாசு
படத்தொகுப்புபிரசன்னா சி. கே.
கலையகம்உவொண்டர் பார் பிலிமிசு
மேசிக்கு பிரேமிசு
விநியோகம்மேசிக்கு பிரேமிசு
எசுக்கேப்பு ஆட்டிட்சு மோசன் பிட்சர்சு (Escape Artists Motion Pictures)
வெளியீடுசூலை 17, 2015 (2015-07-17)
ஓட்டம்130 மணித்துளிகள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்₹65 கோடி (25 நாள்கள்)

நடிகர்கள்

நடிகர்கதைமாந்தர்
தனுஷ்மாரி
காஜல் அகர்வால்சிறீதேவி
விசய் இயேசுதாசுஅருச்சுன் குமார்
உரோபோ சங்கர்சனிக்கிழமை
காளி வெங்கட்டுகாவலர்
கல்லூரி வினோத்துஅடிதாங்கி
மைம் கோபிபேடு (Bird) இரவி
சிறீரஞ்சினிசிறீதேவியின் தாயார்
அனிருத் இரவிச்சந்தர்சிறப்புத் தோற்றம்
பாலாசி மோகன்சிறப்புத் தோற்றம்

[6]

பாடல்கள்

Untitled

இத்திரைப்படத்திற்கு அனிருத் இரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.[7] 2015 சூன் 7ஆம் நாள் திரைப்படத்தின் இசைத்தொகுப்பைச் சோனி மியூசிக்கு இந்தியா வெளியிட்டது.[8] பிகைண்டுவுட்சு இவ்விசைத்தொகுப்புக்கு ஐந்தில் மூன்று விண்மீன்களை வழங்கித் தரப்படுத்தியிருந்தது.[8]

எண் தலைப்புபாடலாசிரியர்பாடகர் நீளம்
1. "மாரி தர லோக்கல்"  தனுசுதனுசு 3:50
2. "ஒரு வித ஆசை"  தனுசுவினீத்து சிறீனிவாசன் 3:11
3. "டானு டானு டானு"  தனுசுஅலிசா தாமசு 3:15
4. "பகுலு உடையும் டகுலு மாரி"  சி. இராக்கேசுதனுசு 1:06
5. "த மாரி ஸ்வாக்"     0:30
6. "தப்பாத் தான் தெரியும்"  விக்கினேசு சிவன்தனுசு, சின்னப்பொண்ணு, மகிழினி மணிமாறன் 3:20
மொத்த நீளம்:
15:15

[9]

இதனையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Maari (2015)". IMDb. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
  2. "மாரி படக்குழுவினருக்கு தனுஷின் விருந்து!". சினிமா விகடன் (2015 மார்ச் 17). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
  3. "மாரி". தினத் தந்தி. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
  4. "மே 25 இசை; ஜூலை 17 வெளியீடு: 'மாரி' அப்டேட்ஸ்". தி இந்து (2015 மே 9). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
  5. "மாரி-ஆன தனுஷ்". தினமலர் சினிமா (2014 நவம்பர் 8). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
  6. "Maari (2015) Full Cast & Crew". IMDb. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
  7. "மாரி தனுசுடன் அனிருத் செம ஆட்டம்". தினமலர் சினிமா (2015 மார்ச் 9). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
  8. "Maari Songs Review". Behindwoods. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
  9. "Maari". Saavn. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.