காளி வெங்கட்
காளி வெங்கட் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பல குறும்படங்களில் நடித்த அனுபவம் உள்ள இவர் தெகிடி மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் பெரிதும் அறியப்படுகிறார்.
காளி வெங்கட் | |
---|---|
![]() | |
தொழில் | திரைப்பட நடிகர். |
ஆரம்ப கால வாழ்க்கை
வெங்கட் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள குடையதேவன்பட்டி எனும் கிராமத்தைச் சேரந்தவர்[1]. பள்ளி நாட்களில் இருந்து நாடகங்களில் நடித்துவரும் இவர் ஒரு திரைப்பட நடிகராகவேண்டும் என்று தனது கிராமத்தில் இருந்து சென்னைக்கு 1997-ல் வந்தார். இயக்குநர் விஜய் பிரபாகரனை தனது குரு என குறிப்பிடும் காளி வெங்கட் சினிமாவைப் பற்றி இன்று எனக்குத் தெரியும் அத்தனை விஷயங்களும் அவர்தான் தனக்குக் கற்பித்ததாக கூறியுள்ளார்.
மேற்கோள்கள்
- "காளி வெங்கட் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி". இந்தியன் எக்ஸ்பிரஸ். பார்த்த நாள் 2 ஆகத்து 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.