கார்த்திக் சிவகுமார்

கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி, ஒரு தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். இவரது மிகச்சிறந்த திரைபடமாக பருத்திவீரன் தீரன் அதிகாரம் ஒன்று. ஆகிய படங்களை குறிப்பிடலாம் 2018 வரை. இதை தவிர தோழா படத்தில் இரண்டு நாயகர்கள் கதைப்படி மற்றொரு நாயகனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உடன் சேர்ந்து நடித்தார் இருவருக்கும் சமமான கதைக்களமான போதிலும்.தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜூனாவுக்கு சமமாக தனது அமைதியான நடிப்பில் உள்ளம் கவர்வார்.

கார்த்தி சிவகுமார்

இயற் பெயர் கார்த்திக் சிவகுமார்
பிறப்பு மே 25, 1977 (1977-05-25)
தொழில் திரைப்பட நடிகர்
நடிப்புக் காலம் 2007-நடப்பு
துணைவர் ரஞ்சனி
பெற்றோர் சிவகுமார் , லட்சுமி
உறவினர் சூர்யா (அண்ணன்)
ஜோதிகா (அண்ணி)
குறிப்பிடத்தக்க படங்கள் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை

இளமைக்காலமும் கல்வியும்

கார்த்தி 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி அவர்களுக்கும் சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.[1]

திருமணம்

இவரது திருமணம் திரு சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், சூலை மாதம் 3 ஆம் தேதி 2011 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.[2]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்குறிப்புகள்
2007பருத்தி வீரன்பருத்தி வீரன்சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தமிழக அரசு சிறந்த நடிகர் விருது
விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2010ஆயிரத்தில் ஒருவன்முத்து
பையாசிவா
நான் மகான் அல்லஜீவா பிரகாசம்
2011சிறுத்தைரத்னவேல் பாண்டியன்,
ராக்கெட் ராஜா
கோகார்த்திக் சிவகுமார்(சிறப்பு தோற்றம்)
2012சகுனிகமலக்கண்ணன்
2013அலெக்ஸ் பாண்டியன்அலெக்ஸ் பாண்டியன்
ஆல் இன் ஆல் அழகு ராஜாஅழகுராஜா2013 தீபாவளி வெளியிடு
பிரியாணிசுகன்
2014மெட்ராஸ்காளி
2015கொம்பன்கொம்பையா பாண்டியன்
2016தோழா சீனு
2016காஷ்மோரோகாஷ்மோரோ,

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. http://celebswikis.com/karthi-actor-height-weight-age/
  2. "கார்த்தி சிவகுமாரின் திருமணவிழா".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.