கோ (திரைப்படம்)

கோ என்பது கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இதில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்திகா நாயர் மற்றும் பியா பாஜ்பாய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தின் நாயகனான ஜீவா ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் ஊடகவியலாளராகத் தோன்றுகின்றார். இந்தக் கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கையை சிறிதளவு ஒத்திருப்பதாக திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் தெரிவித்தார்[1].
படத்தின் காட்சிகள் சென்னை, சீனா, நோர்வேயில்[2] படமாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாக இப்படம் உள்ளது. பேர்கன் நகரத்தில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. மேலும் மேற்கு நோர்வேயில் துரொல்துங்கா, ஸ்தோல்ஹெய்ம், பிரெய்க்கஸ்தூலன் என்ற இடங்களிலும் படக்காட்சிகள் எடுக்கப்பட்டன.

கோ
இயக்கம்கே. வி. ஆனந்த்
தயாரிப்புகுமார்
ஜெயராமன்
கதைகே. வி. ஆனந்த்
சுபா
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புஜீவா
அஜ்மால் அமீர்
கார்த்திகா நாயர்
பியா பாஜ்பாய்i
ஒளிப்பதிவுரிச்சார்ட் எம்.நாதன்
படத்தொகுப்புஅந்தோனி
கலையகம்ஆர். எஸ். இன்போடெயின்மென்ட்
விநியோகம்ரெட் ஜெயண்ட் மூவீஸ்
வெளியீடுஏப்ரல் 22, 2011 (2011-04-22)
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
மொத்த வருவாய்50 கோடி

உசாத்துணைகள்

  1. Ko Movie Review
  2. "Ko at Western Norway Film Commission". Western Norway Film Commission (2010-10-23). பார்த்த நாள் 2011-04-25.




This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.