மாற்றான் (திரைப்படம்)

மாற்றான் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து அக்டோபர் 12, 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரியா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ளார்[2]. இதில் நடிப்பதாக இருந்த பிரகாஷ்ராஜ் விலக்கப்பட்டு அவருக்கு பதில் சச்சின் ஹெடேக்கர் நடித்தார். இவர் தெய்வத்திருமகன் படத்தில் அமலா பாலுக்கு தந்தையாகவும் யாவரும் நலம் என்ற படத்தில் மருத்துவர் பாலுவாகவும் நடித்துள்ளார்[3]

மாற்றான் [1]
இயக்கம்கே. வி. ஆனந்த்
தயாரிப்பு
  • கல்பாத்தி எசு. அகோரம்
கதைகே. வி. ஆனந்த் சுபா
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎசு. சௌந்தர்ராஜன்
படத்தொகுப்புஆண்டனி
கலையகம்ஏஜிஎசு எண்டெர்டெயின்மெண்ட்
வெளியீடுஅக்டோபர் 12, 2012
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு60 கோடி
(US$8.46 மில்லியன்)
மொத்த வருவாய்100 கோடி
(US$14.1 மில்லியன்)

இதன் தெலுங்கு மொழிபெயர்ப்பு டூப்ளிகேட் என்ற பெயரில் வருவதாக இருந்தது. அப்பெயர் தெலுங்கு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேசுக்கு பிடிக்காததால் பிரதர்சு என மாற்றப்பட்டது [4] இதன் தெலுங்கு பதிப்பும் அக்டோபர் 12, 2012 அன்றே வெளியானது. தெலுங்கில் சூரியாவின் பல படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருத்தாலும் இதிலேயே முதல் முறையாக குரல் கொடுத்தார்.

கதை சுருக்கம்

ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் அகிலனும் விமலனும் (சூரியா). இவர்களுக்கு மற்ற உறுப்புகள் தனித்தனி என்றாலும் இதயம் மட்டும் ஒன்று. விமலன் மென்மையானவனாகவும் ௮கிலன் முரடனாகவும் உள்ளார்கள். விமலனை அஞ்சலி (காஜல் அகர்வால்) காதலிக்கிறார். விமலன் சில தவறுகளை கண்டுபிடித்ததால் அவரைக் கொன்றுவிடுகிறார்கள். இதயம் ௮கிலனுக்கு பொருத்தப்படுகிறது. அஞ்சலி இப்போது ௮கிலனை காதலிக்கிறார். ௮லிலன் தான் ஒட்டிப்பிறந்ததற்கான இரகசியத்தையும் தவறுகளுக்கு காரணமானவர்களையும் கண்டறிந்து கொல்கிறார்.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.