சூர்யா (நடிகர்)
சூர்யா (பிறப்பு: சூலை 23, 1975), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[1] இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார்.[2] மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.[1][3] நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்துக் கொண்டார்.[4] இவர்களுக்கு ஏப்ரல் 10, 2007 அன்று பெண்குழந்தை பிறந்தது.
சூர்யா | |
---|---|
![]() | |
பிறப்பு | சரவணன் சூலை 23, 1975 சென்னை, தமிழ்நாடு, இந்தியா ![]() |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1997 – முதல் |
சமயம் | இந்து |
பெற்றோர் | சிவகுமார், லட்சுமி |
வாழ்க்கைத் துணை | ஜோதிகா (2006) |
பிள்ளைகள் | தியா, தேவ் |
தனிப்பட்ட வாழ்க்கை
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.
திரைப்பட வாழ்க்கை
இவரின் முதல் படமான நேருக்கு நேர் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.[5][6] 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை வசந்த் இயக்கிருந்தார். ஆனால் இதன் பிறகு வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக காதலே நிம்மதி (1998), சந்திப்போமா (1998),பெரியண்ணா (1999),[7] பூவெல்லாம் கேட்டுப்பார் (1999). இந்தத் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த ஜோதிகாவை இவர் மணந்துகொண்டார்.[5][8]
2001 ஆம் ஆண்டில் பாலாவின் (இயக்குனர்) இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளியாக நடித்திருப்பார்.[9] இந்தப் படம் இவருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[10][11] 2003 இல் கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படத்தில் நடித்தார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இந்த இரு திரைப்படங்களும் விமர்சன , வியாபார ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதன் மூலம் தமிழகத் திரைப்படத்துறை முன்னணி நாயகர்களில் ஒருவரானார்.[5][12] மேலும் 51 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்தற்காக பரிந்துரை செய்யப்பட்டது.[13] பின் பேரழகன் திரைப்படத்தில் கல்லூரி மாணவராகவும், கூன் விழுந்த நபராகவும் இரு வேடங்களில் நடித்திருப்பார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 52 வது பிலிம்பேர் விருது பெற்றார்.[9][14] 2004 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து (திரைப்படம்) நடித்தார். இவர் இதில் மாணவ தலைவர் வேடத்தில் நடித்திருந்தார்.[9]
2005 ஆம் ஆண்டில் சூர்யா மாயாவி (2005 திரைப்படம்), கஜினி (திரைப்படம்) ,ஆறு ஆகிய மூன்று திரைப்படங்களில் நாயகனாக நடித்தார. கஜினியில் மறதிநோய் உள்ளவராக நடித்திருப்பார்.[11] இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (கஜினி (2008 திரைப்படம்) அதே பெயரில் வெளியானது. மாயாவி, ஆறு ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது.[15][16] 2006 இல் சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்), 2007 இல் வேல் (திரைப்படம்) போன்றவற்றில் நடித்தார். இதில் வேல் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.[17][18] 2008 இல் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்தார். இதில் தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.[19][20]
2009 இல் அயன் (திரைப்படம்), ஆதவன் (திரைப்படம்) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் சிங்கம் திரைப்படத்தில் நடித்தார். இதில் அனுசுக்கா செட்டி உடன் நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து சிங்கம் 2 , சி3 (திரைப்படம்) ஆகியவை வெளியாகின.[21] ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான ரத்தசரித்திரம் திரைப்படத்தில் நடித்தார்.[22] ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு (திரைப்படம்) திரைப்படத்தில் போதி தருமன் வேடத்தில் நடித்தார். இவரது மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே எனும் திரைப்படத்தை தயாரித்தார்.[23]
பொது வாழ்க்கை
திரைப்படங்களின் பட்டியல்
திரைப்படம் | ஆண்டு | வேடங்கள் | இயக்குநர் (திரைப்படம்) | குறிப்புகள் | சான்றுகள் |
---|---|---|---|---|---|
நேருக்கு நேர் | 1997 | சூரியா | வசந்த் | ||
காதலே நிம்மதி | 1998 | சந்துரு | இந்திரன் | [25] | |
சந்திப்போமா | 1998 | விஸ்வா | இந்திரகுமார் | [25] | |
பெரியண்ணா | 1999 | சூர்யா | எஸ். ஏ. சந்திரசேகர் | [25][26] | |
பூவெல்லாம் கேட்டுப்பார் | 1999 | கிருஷ்ணா | வசந்த் | [5][25] | |
உயிரிலே கலந்தது | 2000 | சூர்யா | ஜெயா | [27] | |
பிரெண்ட்ஸ் | 2001 | சந்துரு | சித்திக் | [28] | |
நந்தா | 2001 | நந்தா | பாலா | [29] | |
உன்னை நினைத்து | 2002 | சூர்யா | விக்ரமன் | [30] | |
ஸ்ரீ | 2002 | ஸ்ரீ | புஷ்பவாசகம் | [31] | |
மௌனம் பேசியதே | 2002 | கௌதம் | அமீர் | [32] | |
காக்க காக்க | 2003 | அன்புசெல்வன் | கௌதம் மேனன் | பிலிம் பேர் விருது பரிந்துரை | [13][33] |
பிதாமகன் | 2003 | சக்தி | பாலா | சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது | [13][34] |
பேரழகன் | 2004 | சின்னா, கார்த்தி | சசி சங்கர் | சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது | [9][35] |
ஆய்த எழுத்து | 2004 | மைக்கேல் வசந்த் | மணிரத்னம் | [36] | |
மாயாவி | 2005 | பாலையா | சிங்கம்புலி | [37] | |
கஜினி | 2005 | சஞ்சய் ராமசாமி | ஏ. ஆர். முருகதாஸ் | பிலிம்பேர் விருது பரிந்துரை | [38] |
ஆறு | 2005 | ஆறுமுகம் | ஹரி | [39] | |
ஜூன் ஆர் | 2006 | ராஜா | ரேவதி எஸ் வர்மா | கௌரவத் தோற்றம் | [40] |
சில்லுனு ஒரு காதல் | 2006 | கௌதம் | கிருஷ்ணா | [41] | |
வேல் | 2007 | வாசிதேவன், வெற்றிவேல் | ஹரி | [17] | |
குசேலன் (திரைப்படம்) | 2008 | நடிகராகவே | பி. வாசு | சினிமா சினிமா பாடலில் கௌரவத்தோற்றம் | [25][42] |
வாரணம் ஆயிரம் (திரைப்படம்) | 2008 | கிருஷ்ணன்,சூரிய கிருஷ்ணன் | கௌதம் மேனன் | சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது | [19][20] |
அயன் (திரைப்படம்) | 2009 | டேவராஜ் வேலு சாமி | கே.வி.ஆனந்த் | பிலிம்பேர் விருது பரிந்துரை | [43][44] |
ஆதவன் (திரைப்படம்) | 2009 | மாதவன், சுப்பிரமனியன் | கே. எஸ். ரவிக்குமார் | [45][46] | |
சிங்கம் | 2010 | துரை சிங்கம் | ஹரி (இயக்குநர்) | பிலிம்பேர் விருது பரிந்துரை | [47][48] |
ரத்த சரித்திரம் | 2010 | சூர்ய நாராயண ரெட்டி | ராம் கோபால் வர்மா | இரண்டாம் பாதியில் கௌரவத் தோற்றம் | [22][49] |
மன்மதன் அம்பு | 2010 | நடிகராகவே | கே.எஸ். ரவிக்குமார் | ஓயாலே பாடலில் கௌரவத்தோற்றம் | [50] |
கோ | 2011 | நடிகராகவே | கே.வி.ஆனந்த் | அக நக பாடலில் கௌரவத்தோற்றம் | [51] |
அவன் இவன் | 2011 | நடிகராகவே | பாலா | கௌரவத் தோற்றம் | [52] |
7 ஆம் அறிவு | 2011 | அரவிந்த், போதிதர்மன் | ஏ. ஆர். முருக தாஸ் | பிலிம்பேர் விருது பரிந்துரை | [53][54] |
மாற்றான் | 2012 | அகிலன், விமலன் | கே.வி.ஆனந்த் | பிலிம்பேர் விருது பரிந்துரை | [55][56] |
சென்னையில் ஒரு நாள் | 2013 | நடிகராகவே தோன்றினார் | சஹீத் காதர் | கௌரவத் தோற்றம் | [57] |
சிங்கம் 2 | 2013 | துரை சிங்கம் | ஹரி | பிலிம்பேர் விருது பரிந்துரை | [58][59] |
நினைத்தது யாரோ | 2014 | நடிகராகவே | விக்ரமன் | கௌரவத் தோற்றம் | [60] |
அஞ்சான் | 2014 | ராஜூபாய் (கிருஷ்ணா) | லிங்குசாமி | [61] | |
மாசு என்கிற மாசிலாமணி | 2015 | மாசிலாமனி, சக்தி | வெங்கட் பிரபு | ||
பசங்க 2 | 2015 | தமிழ்நாடன் | பாண்டிராஜ் | விரிவான கௌரவத் தோற்றம் | [62] |
24 | 2016 | ஆத்ரேயா, மணிகண்டன், சேதுராமன் | விக்ரம் குமார் | பிலிம் பேர் நடுவர் விருது | |
சிங்கம்3 | 2017 | திரை சிங்கம் | ஹரி | [63] | |
தானா சேர்ந்த கூட்டம் | 2018 | இனியன் | விக்னேஷ் சிவன் | [64] | |
நந்த கோபாலன் குமரன்(அதிகாரமற்ற தலைப்பு) | படப்பிடிப்பில் | செல்வராகவன் | படப்பிடிப்பில் |
ஆதாரங்கள்
- "சூர்யா". தமிழ் திரை உலகம். பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- சங்கர் (அக்டோபர் 30, 2012). "நடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு?". ஒன்இந்தியா. பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- "சூர்யா, சந்தியாவுக்கு பிலிம்பேர் விருது!". ஒன்இந்தியா (பெப்ரவரி 5, 2004). பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- "சூர்யா - ஜோதிகா செப். 11ல் திருமணம்!". ஒன்இந்தியா (ஆகத்து 6, 2006). பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- Srinivasan, Pavithra (20 October 2011). "Looking at Suriya's landmark films". Rediff.com. மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
- Srinivasan, Pavithra (11 November 2008). "The best of Surya". Rediff.com. மூல முகவரியிலிருந்து 16 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 January 2017.
- Rangarajan, Malathi (9 June 2000). "Each step is a measured one". தி இந்து. Archived from the original on 16 January 2017. https://web.archive.org/web/20170116123648/http://www.thehindu.com/2000/06/09/stories/09090224.htm. பார்த்த நாள்: 16 January 2017.
- Sudhish Kamath; Shankar, T.S.; Radhakrishnan, R.K. (11 July 2001). "Talk of the Town". The Hindu. Archived from the original on 16 January 2017. https://web.archive.org/web/20170116123338/http://www.thehindu.com/2001/07/11/stories/0411401v.htm. பார்த்த நாள்: 16 January 2017.
- Ramachandran, Naman (22 July 2013). "Singam On Song". அவுட்லுக். மூல முகவரியிலிருந்து 17 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 January 2017.
- Pillai, Sreedhar (24 July 2002). "A chip off the old block". The Hindu. Archived from the original on 17 January 2017. https://web.archive.org/web/20170117083719/http://www.thehindu.com/thehindu/mp/2002/07/24/stories/2002072400140200.htm. பார்த்த நாள்: 17 January 2017.
- Rajpal, Roktim (23 July 2015). "Happy Birthday Suriya: 5 performances that make him the 'Singam' of Tamil cinema". CNN-News18. மூல முகவரியிலிருந்து 17 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 January 2017.
- Pillai, Sreedhar (29 December 2003). "Reel of fortune". The Hindu. Archived from the original on 17 January 2017. https://web.archive.org/web/20170117085958/http://www.thehindu.com/thehindu/mp/2003/12/29/stories/2003122900170100.htm. பார்த்த நாள்: 17 January 2017.
- "51st Annual Manikchand Filmfare Award winners". The Times of India. 4 June 2004. Archived from the original on 26 January 2015. https://archive.is/20150126140422/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/51st-Annual-Manikchand-Filmfare-Award-winners/articleshow/718496.cms. பார்த்த நாள்: 28 March 2016.
- Surendran, Anusha (18 April 2016). "Twice as nice". The Hindu. Archived from the original on 5 March 2017. https://web.archive.org/web/20170305081344/http://www.thehindu.com/news/cities/mumbai/entertainment/twice-as-nice/article8488429.ece. பார்த்த நாள்: 17 January 2017.
- "Chennai box-office (Mar 25 – 27)". Sify (30 March 2005). மூல முகவரியிலிருந்து 19 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 January 2017.
- "Chennai box-office (Jan 06 – 08)". Sify (10 January 2006). மூல முகவரியிலிருந்து 19 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 January 2017.
- "Vel". Sify (9 November 2007). மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
- Pillai, Sreedhar (24 October 2008). "Diwali dampeners". The Times of India. Archived from the original on 19 January 2017. https://archive.is/20170119104447/http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOI&BaseHref=TOICH%2F2008%2F10%2F24&PageLabel=25&EntityId=Ar02500&ViewMode=HTML&GZ=T. பார்த்த நாள்: 19 January 2017.
- "56th Filmfare Awards 2008 given away". Sify (3 August 2009). மூல முகவரியிலிருந்து 19 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 January 2017.
- Rangarajan, Malathi (21 November 2008). "An ode to dad dearest — Vaaranam Aayiram". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115134248/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/An-ode-to-dad-dearest-Vaaranam-Aayiram/article15400806.ece. பார்த்த நாள்: 15 January 2017.
- "S3 now becomes C3 for tax-exemption!". Sify (17 January 2017). மூல முகவரியிலிருந்து 18 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 January 2017.
- "Birthday special: Vivek Oberoi's 5 memorable performances". Mid Day. 3 September 2015. Archived from the original on 16 January 2017. https://web.archive.org/web/20170116100205/http://www.mid-day.com/articles/birthday-special-vivek-oberois-5-memorable-performances/16506199. பார்த்த நாள்: 16 January 2017.
- Menon, Vishal (3 May 2016). ""Suriya has Rs.50 crore market potential in Andhra, Telangana"". The Hindu. Archived from the original on 19 January 2017. https://web.archive.org/web/20170119131016/http://www.thehindu.com/features/cinema/gnanavel-raja-speaks-on-suriyas-24/article8551774.ece. பார்த்த நாள்: 19 January 2017.
- "ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ முன்வர வேண்டும்: சூர்யா வேண்டுகோள்". (12 சூன், 2016). தி இந்து தமிழ்
- "Filmography: Surya". Sify (22 April 2009). மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
- Periyanna [Big Brother] (Motion Picture) (in Tamil). Rajshri Productions. 4 January 2013. Retrieved 15 January 2017.CS1 maint: unrecognized language (link)
- Rangarajan, Malathi (6 October 2000). "Film Review: Uyirilae Kalandhadhu". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115121454/http://www.thehindu.com/thehindu/2000/10/06/stories/0906022b.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (26 January 2001). "Film Review: Friends". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115121607/http://www.thehindu.com/2001/01/26/stories/09260223.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Tulika (6 December 2001). "Strangely familiar". Rediff.com. மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
- Rangarajan, Malathi (5 May 2002). "Unnai Ninaithu". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115122202/http://www.thehindu.com/thehindu/fr/2002/05/17/stories/2002051701370200.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (26 July 2002). "Sri". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115122623/http://www.thehindu.com/thehindu/fr/2002/07/26/stories/2002072600880201.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (27 December 2002). "Mounam Pesiyadhae". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115122355/http://www.thehindu.com/thehindu/fr/2002/12/27/stories/2002122701430200.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (8 August 2003). ""Kaakha Kaakha"". The Hindu. Archived from the original on 15 January 2017. https://archive.is/20170115124434/http://www.thehindu.com/thehindu/fr/2003/08/08/stories/2003080801870200.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (31 October 2003). "Pithamagan". The Hindu. Archived from the original on 15 January 2017. https://archive.is/20170115124430/http://www.thehindu.com/fr/2003/10/31/stories/2003103101210200.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (14 May 2004). ""Paerazhagan"". The Hindu. Archived from the original on 15 January 2017. https://archive.is/20170115124433/http://www.thehindu.com/fr/2004/05/14/stories/2004051401630300.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (28 May 2004). ""Aayudha Ezhuthu"". The Hindu. Archived from the original on 15 January 2017. https://archive.is/20170115124938/http://www.thehindu.com/fr/2004/05/28/stories/2004052801670300.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (18 March 2005). ""Maayavi"". The Hindu. Archived from the original on 15 January 2017. https://archive.is/20170115124444/http://www.thehindu.com/fr/2005/03/18/stories/2005031801860201.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (7 October 2005). "On another psycho trip". The Hindu. Archived from the original on 15 January 2017. https://archive.is/20170115125058/http://www.thehindu.com/fr/2005/10/07/stories/2005100702700200.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rangarajan, Malathi (16 December 2005). "Blood flows too freely". The Hindu. Archived from the original on 15 January 2017. https://archive.is/20170115125832/http://www.thehindu.com/fr/2005/12/16/stories/2005121602680200.htm. பார்த்த நாள்: 15 January 2017.
- Rajan, M. C. (22 July 2012). "DMK siren Kushbu to make Bollywood comeback opposite Amitabh Bachchan". India Today. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115131346/http://indiatoday.intoday.in/story/kushbu-bollywood-comeback-opposite-amitabh-bachchan/1/209573.html. பார்த்த நாள்: 15 January 2017.
- Kumar, S. R. Ashok (8 September 2006). "An aimless affair — Sillunu Oru Kadhal". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115133022/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/an-aimless-affair-sillunu-oru-kadhal/article3230641.ece. பார்த்த நாள்: 15 January 2017.
- "Cinema Cinema" — Kuselan — Rajnikanth, Pasupathy — Tamil Film Song (Motion picture) (in Tamil). India: Cinema Junction. 1 November 2014. From 00:01:33 to 00:01:35.CS1 maint: unrecognized language (link)
- Srinivasan, Pavithra (3 April 2009). "Ayan is a must-watch". Rediff.com. மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
- "57th Filmfare Awards South". Filmfare Awards South. The Times Group.
- "Aadhavan". Sify (17 October 2009). மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
- Kingston, Daya (2009). "Aadhavan". Upperstall.com. மூல முகவரியிலிருந்து 2 December 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 December 2017.
- Ravi, Bhama Devi (29 May 2010). "Singam Movie Review". The Times of India. Archived from the original on 15 January 2017. https://archive.is/20170115163419/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Singam/movie-review/5987899.cms. பார்த்த நாள்: 15 January 2017.
- "58th Filmfare Awards South". Filmfare Awards South. The Times Group.
- "Rakta Charitra 2 Movie Review". The Times of India. 4 May 2016. Archived from the original on 15 January 2017. https://archive.is/20170115163415/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/movie-reviews/rakta-charitra-2/movie-review/7034794.cms. பார்த்த நாள்: 15 January 2017.
- Pillai, Sreedhar (1 March 2011). "It's cameo craze for Kollywood actors!". The Times of India. Archived from the original on 15 May 2015. https://web.archive.org/web/20150515152222/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Its-cameo-craze-for-Kollywood-actors/articleshow/7595016.cms. பார்த்த நாள்: 21 January 2017.
- "Sanjaana makes Suriya, Karthi dance". The Times of India. 25 January 2011. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115161237/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sanjaana-makes-Suriya-Karthi-dance/articleshow/7358963.cms. பார்த்த நாள்: 15 January 2017.
- Srinivasan, Pavithra (17 June 2011). "Review: Avan Ivan fails in execution". Rediff.com. Archived from the original on 16 January 2017. https://web.archive.org/web/20170116101221/http://www.rediff.com/movies/review/south-review-avan-ivan/20110617.htm. பார்த்த நாள்: 16 January 2017.
- Srinivasan, Pavithra (26 October 2011). "Review: 7am Arivu is worth a watch". Rediff.com. மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
- "59th Filmfare Awards South". Filmfare Awards South. The Times Group.
- Srinivasan, Pavithra (12 October 2012). "Review: Maattrraan is not up to the mark". Rediff.com. மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
- "60th Idea Filmfare Awards 2013 (South) Nominations". Filmfare (4 July 2013). மூல முகவரியிலிருந்து 20 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 January 2017.
- Ramanujam, Srinivasa (18 November 2014). "The sweat way to success". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115160107/http://www.thehindu.com/features/metroplus/society/actor-suriya-who-kicks-off-the-dusk-to-dawn-marathon-on-saturday-shares-his-fitness-mantra/article6611494.ece. பார்த்த நாள்: 15 January 2017.
- Ramnath, Nandini (5 July 2013). "Film Review Singam 2". Mint (newspaper). Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115154953/http://www.livemint.com/Leisure/JT6XqzUiqaHtOxtClFsudK/Film-Review--Singam-2.html. பார்த்த நாள்: 15 January 2017.
- "61st Idea Filmfare Awards — Complete Nominations List". The Times of India. 12 July 2014. Archived from the original on 1 October 2015. https://web.archive.org/web/20151001111356/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/61st-Idea-Filmfare-Awards-Complete-Nominations-List/articleshow/38267114.cms. பார்த்த நாள்: 22 December 2016.
- Ninaithathu Yaaro — Cameo appearance by 30 most Prominent Kollywood Celebrities (in Tamil). India: MSK Film Productions. 17 June 2014. From 00:00:13 to 00:00:16.CS1 maint: unrecognized language (link)
- Baradwaj Rangan (16 August 2014). "Anjaan review: Don yawn". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115160336/http://www.thehindu.com/features/cinema/anjaan-review/article6324278.ece. பார்த்த நாள்: 15 January 2017.
- Subramanian, Anupama (26 December 2015). "Movie Review 'Pasanga 2': An educative film worth watching". Deccan Chronicle. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115164032/http://www.deccanchronicle.com/151226/entertainment-movie-review/article/movie-review-pasanga-2-educative-film-worth-watching. பார்த்த நாள்: 15 January 2017.
- Menon, Thinkal (9 February 2017). "Si3 Movie Review". The Times of India. Archived from the original on 9 February 2017. https://archive.is/20170209113244/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/si3/movie-review/57059210.cms. பார்த்த நாள்: 9 February 2017.
- Menon, Vishal (12 January 2018). "‘Thaanaa Serndha Kootam’ review: An able and fresh adaptation". The Hindu. Archived from the original on 14 January 2018. https://web.archive.org/web/20180114114623/http://www.thehindu.com/entertainment/movies/thaanaa-serndha-kootam-review-an-able-and-fresh-adaptation/article22427545.ece. பார்த்த நாள்: 12 January 2018.