மாதவன்
ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1] திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார்.[2] சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த இவர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.[3] மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
- அலைபாயுதே
- கன்னத்தில் முத்தமிட்டால்
- ஆய்த எழுத்து
- மின்னலே
- ரன்
- என்னவளே
- தம்பி
- அன்பே சிவம்
- பிரியசகி
- ஜேஜே
- ப்ரியமான தோழி
- நள தமயந்தி
- பார்த்தாலே பரவசம்
- டும் டும் டும்
- லேசா லேசா
- வாழ்த்துகள்
ஆர். மாதவன் | |
---|---|
இயற் பெயர் | மாதவன் ரங்கநாதன் |
பிறப்பு | சூன் 1, 1970 ஜாம்ஷெட்பூர், ஜார்க்கண்ட் ![]() |
வேறு பெயர் | மேடி |
துணைவர் | சரிதா |
குறிப்பிடத்தக்க படங்கள் | அலைபாயுதே கன்னத்தில் முத்தமிட்டால் ஆய்த எழுத்து மின்னலே |
நடித்த திரைப்படங்கள்
வருடம் | திரைப்படம் | பாத்திரத்தின் பெயர் | மொழி | மேலும் தகவல்கள் |
---|---|---|---|---|
1996 | இஸ் ராத் கி சுபாக் நகின் | கிளப் பாடகர் | இந்தி | புகழ்பெறாப் பாத்திரம் |
1997 | இண்பெர்னோ | ரவி | ஆங்கிலம் | |
1999 | சாந்தி சாந்தி சாந்தி | சித்தார்த் | கன்னடம் | |
2000 | அலைபாயுதே | கார்த்திக் | தமிழ் | |
என்னவளே | ஜேம்சு வசந்த் | தமிழ் | ||
2001 | மின்னலே | ராஜேஷ் சிவகுமார் | தமிழ் | |
டும் டும் டும் | ஆதித்யா | தமிழ் | ||
பார்த்தாலே பரவசம் | மாதவா | தமிழ் | ||
ரகுனா கை தில் மெய்ன் | மாதவ் சாஸ்திரி | இந்தி | பரிந்துரை, சிறந்த அறிமுக நடிகருக்கான ஜீ சினி விருது பரிந்துரை, மிகச் சீரிய புதுமுக ஆண் நட்சத்திரத் திரை விருது | |
2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | திருசெல்வன் | தமிழ் | வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மேலும் ரன், அன்பே சிவம் |
ரன் | சிவா | தமிழ் | வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மேலும் கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம் | |
தில் வில் பியார் வியார் | கிரிஷ் | இந்தி | ||
2003 | அன்பே சிவம் | அன்பரசு | தமிழ் | வெற்றியாளர், வெற்றியாளர் , ஜடிஎஃப்ஏ சிறந்த துணைநடிகர் விருது வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மேலும் கன்னத்தில் முத்தமிட்டால், ரன் பரிந்துரை, தமிழின் சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது |
நள தமயந்தி | ராம்ஜி | தமிழ் | ||
லேசா லேசா | தேவ நாராயணன் | தமிழ் | கெளரவ தோற்றம் | |
ப்ரியமான தோழி | அசேக் | தமிழ் | ||
ஜேஜே | ஜெகன் | தமிழ் | ||
2004 | நத்திங் பட் லைப் | தாமஸ் ராபர்ட்சு | மலையாளம் | |
எதிரி | சுப்பிரமணி | தமிழ் | ||
ஆய்த எழுத்து | இன்பா சேகர் | தமிழ் | வெற்றியாளர், தமிழின் சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது | |
2005 | பிரியசகி | சந்தான கிருஷ்ணன் | தமிழ் | |
ராம்ஜி லண்டன்வாலே | ராம்ஜி திவாரி | இந்தி | மேலும் எழுத்தாளர் | |
2006 | ரங் தே பசந்தி | அஜய் ரதோட் | ஹிந்தி | சிறப்புத் தோற்றம் |
தம்பி | வேலு தொண்டைமான் | தமிழ் | ||
ரெண்டு | சக்தி, கண்ணன் | தமிழ் | ||
2007 | குரு | சியாம் சக்சேனா | இந்தி | |
தில்லி ஹைட்ஸ் | அவராக | ஹிந்தி | அவராக தோன்றல் | |
ஆர்யா | ஆர்யா | தமிழ் | ||
தட் போர்-லட்டர் வேர்டு | அவராக | ஆங்கிலம் | அவராக தோன்றல் | |
எவனோ ஒருவன் | சிறீதர் வாசுதேவன் | தமிழ் | வெற்றியாளர், ஐடிஎஃப்ஏ சிறந்த நடிகர் விருது மேலும் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் | |
2008 | வாழ்த்துகள் | கதிரவன் | தமிழ் | |
மும்பை மேரி ஜான் | நிகில் அகர்வால் | இந்தி | ||
திப்பு கன்யன் திப்பு கிரி | அவராக | மலையாளம் | அவராக தோன்றல் | |
2009 | யாவரும் நலம் | மனோகர் | தமிழ் | ஒரே நேரத்தில் 13பீஎன்று இந்தி தயாரிக்கப்பட்டது பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் விருது |
13பி | மனோகர் | இந்தி | அதேவேளையில் தமிழில், யாவரும் நலம் | |
குரு என் ஆளு | குரு | தமிழ் | ||
சிக்கந்தர் | ராஜேஸ் ராவ் | இந்தி | ||
3 இடியட்சு | ஃபர்ஹான் குரேஷி | இந்தி | பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரை, ஐஐஎஃப்ஏ சிறந்த துணை நடிகர் விருது | |
2010 | ஓம் சாந்தி | மேடி | தெலுங்கு | கெளரவ தோற்றம் |
டீன் பாட்டி | சந்தானு | இந்தி | ||
ஜூடா ஹி ஜாகி | இந்தி | (கெளரவ தோற்றம்) | ||
மன்மதன் அம்பு | தமிழ் | |||
சண் கிளாஸ்(திரைப்படம்) | இந்தி | |||
2011 | தனு வெட்ஸ் மனு | மனு | இந்தி | பிந்தைய தயாரிப்பு |
நான் அவள் அது | ஆதித்யா | தமிழ் | தாமத வருகை |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.