ஜீவா (திரைப்பட நடிகர்)
ஜீவா (பிறப்பு - ஜனவரி 4, 1984, இயற்பெயர் - அமர்) தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைப்படத் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி இவரது தந்தையும், திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.
ஜீவா | |
---|---|
![]() ஜனவரி 2014- இல் ஜீவா | |
இயற் பெயர் | அமர் சௌத்திரி |
பிறப்பு | சனவரி 4, 1984 சென்னை, இந்தியா |
துணைவர் | சுப்ரியா (2007–தற்போதும்) |
குறிப்பிடத்தக்க படங்கள் | ராம் (2005) டிஷ்யூம்' (2006) ஈ (2006) |
இணையத்தளம் | http://www.jeevaonline.com |
திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2003 | ஆசை ஆசையாய் | வினோத் | தமிழ் | |
தித்திக்குதே | வேனு | தமிழ் | ||
2005 | ராம் | ராம கிருஷ்ணா | தமிழ் | வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழா விருது |
2006 | டிஷ்யூம் | பாஸ்கர் | தமிழ் | |
கீர்த்தி சக்கரா | ஜெய்குமார் | மலையாளம் | வெற்றி, சிறந்த நட்சத்திர ஜோடிக்கான ஏசியாநெட் திரைப்பட விருது (shared with Gopika) | |
அரண் | தமிழ் | கீர்த்தி சக்ராவின் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் | ||
ஈ | ஈஸ்வரன் (ஈ) | தமிழ் | ||
2007 | பொறி | ஹரி | தமிழ் | |
கற்றது தமிழ் | பிரபாகர் | தமிழ் | பரிந்துரை: விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) | |
ராமேஸ்வரம் | ஜீவன் | தமிழ் | ||
2008 | தெனாவட்டு | கோட்டைசாமி | தமிழ் | |
2009 | சிவா மனசுல சக்தி | சிவா | தமிழ் | |
2010 | கச்சேரி ஆரம்பம் | பாரி | தமிழ் | |
பாஸ் என்கிற பாஸ்கரன் | சிவா | தமிழ் | சிறப்பு தோற்றம் | |
2011 | சிங்கம் புலி | அசோக், சிவா | தமிழ் | |
கோ | அஸ்வின் | தமிழ் | ||
ரௌத்திரம் | சிவா | தமிழ் | ||
வந்தான் வென்றான் | அர்ஜூன் | தமிழ் | ||
2012 | நண்பன் | சேவற்கொடி செந்தில் | தமிழ் | |
நீ தானே என் பொன்வசந்தம் | வருண் கிருஷ்ணன் | தமிழ் | ||
முகமூடி | தமிழ் | |||
2013 | டேவிட் | டேவிட் | தமிழ் | |
என்றென்றும் புன்னகை | கௌதம் ஸ்ரீதர் | தமிழ் | ||
2014 | ஜில்லா | தமிழ் | சிறப்புத் தோற்றம் - "பாட்டு ஒன்னு" பாடலில் மட்டும் [1] | |
யான் | சந்திரசேகர் | தமிழ் | ||
2016 | போக்கிரி ராஜா | தமிழ் | [2] |
இவர் 2019 ஆம் ஆண்டு கீ என்ற படத்தில் நடித்தார்.
குறிப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.