பொறி (திரைப்படம்)

'பொறி' 2007ம் ஆண்டில் வெளிவந்த ஒர் தமிழ் திரைப்படமாகும்.இத்திரைப்படத்தினை சுப்ரமணி சிவா இயக்கியள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக ஜீவா,பூஜா,சீமான்,கருணாஸ்,நாகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொறி
இயக்கம்சுப்ரமணி சிவா
தயாரிப்புகார்த்திக்
கதைசுப்ரமணி சிவா
இசைதீனா
நடிப்புஜீவா
பூஜா
சீமான்
கருணாஸ்
விநியோகம்Nivi-Pavi Creations
மொழிதமிழ்

கதை

எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது

நேர்மையான ஆசிரியராக இருந்து ஓய்வு பெறும் நாகேஷின் மகன் ஹரி(ஜீவா), நடைபாதையில் சிறியளவில் புத்தக விற்பனை செய்யும் தொழிலை நடாத்துகின்றவராவார். மகனுக்காக தன்னுடைய ஓய்வூதியப் பணத்தை எல்லாம் செலவு செய்து ஒரு கடை வைத்துத்தருகிறார் ஹரியின் அப்பா. சந்தோஷமாக ஹரி தொழிலைத் தொடங்க நினைக்கும்போதுதான் அந்தக் கடை மலேசியா வணிகரான (சீமான்)வேறொருவருக்குச் சொந்தமானது என்பதும் தன் அப்பா ஏமாற்றப்பட்டதும் ஹரிக்குத் தெரியவருகிறது. சின்ன அளவில் நடந்துவரும் மோசடி இது என்று நினைத்து சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்க புறப்படும் ஹரிக்கு காத்திருக்கிறது பெரிய அதிர்ச்சி. இதில் சம்மந்தப்பட்டவர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் பெற்றவர்கள் என்பது தெரியவருகின்றது. தொடர்ந்து அவர்களை எதிர்க்கிறார். போலி பத்திரங்களைத் தயார் செய்து நடுத்தர குடும்பத்து மக்களை ஏமாற்றும் அந்தக் கும்பலை(விநாயகம் ரியல் எஸ்டேட்) சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்த நினைக்கிறார்.இதனை எவ்வாறு நடாத்திக் காட்டுகின்றார் என்பதே மீதிக்கதையாகும்.

நடிகர்கள்

நடிகர்பாத்திரம்
ஜீவாஹரி
பூஜாபூஜா
நாகேஷ்ஹரியின் அப்பா
இயக்குனர் சீமான்மலேசிய வணிகர்

பாடல்

  • ஏப்படியெல்லாம் - சங்கர் மகாதேவன்
  • ஜிகினா நடந்து - கிரேஸ் கருனாஸ், ஜெசி கீவ்ட்
  • பேருந்தில் நீ எனக்கு - தீனா, மது பாலகிரிஸ்ணன், மது சீறி
  • பூக்கலெல்லாம் - ஹரிகரன்
  • வேதளா தேவதையே - மாலதி, சங்கர் மகாதேவன்
  • எட்டா ஊயரத்தில் - தீனா, ஜீவா,சுப்பரமணி சீவா

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.