தீனா (திரைப்படம்)

தீனா அஜீத் குமார் நடித்து 2001ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி, லைலா போன்றோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தீனா
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புஜெய பிரசாந்த். என்
கதைஏ. ஆர். முருகதாஸ்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅஜித் குமார்
சுரேஷ் கோபி
லைலா
ஒளிப்பதிவுஅரவிந்த்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்விஜயம் சினி கம்பைன்சு
வெளியீடுசனவரி 14, 2001 (2001-01-14)
ஓட்டம்167 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தயாரிப்பு

ஏ. ஆர். முருகதாஸ் இயக்குநர் எஸ். ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணிபுரியும்பொழுதே நடிகர் அஜித் குமாரிடம் இப்படத்தில் லைலா மற்றும் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடிக்க சம்மதம் பெற்றார்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

Untitled

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா ஆவார். திசம்பர் 2000 அன்று வெளியான இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிப் பாடல்களாகும். யுவன் சங்கர் ராஜா தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள அவருக்கு இத்திரைப்படம் உதவியது.

எண்பாடல்பாடியவர்கள்நீளம்
1"என் நெஞ்சில் நீங்களானே"ஹரிஷ் ராகவேந்திரா4:22
2"காதல் வெப்சைட் ஒன்று"சங்கர் மகாதேவன், ஹரிணி, டிம்மி5:35
3"நீ இல்லை என்றால்"பவதாரிணி, முருகன்5:27
4"சொல்லாமல் தொட்டுச் செல்லும்"ஹரிஹரன்5:19
5"வத்திக்குச்சி பத்திக்காதடி"எஸ். பி. பாலசுப்பிரமணியம்4:45

வகை

அதிரடித் திரைப்படம்

மேற்கோள்கள்

  1. http://ajithkumar.free.fr/derniere08.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.