நக்மா
நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார்[1]. இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவர். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர்.[2] இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களுக்குப் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவராவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[3]
நக்மா | ||||||
---|---|---|---|---|---|---|
![]() நக்மா | ||||||
இயற் பெயர் | நந்திதா மொராஜி | |||||
பிறப்பு | திசம்பர் 25, 1974![]() | |||||
வேறு பெயர் | நர்மதா சாதனா | |||||
நடிப்புக் காலம் | 1990- தற்போதுவரை | |||||
|
தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
அரசியல் அவதாரம்
2014ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதில் போட்டியிட்டார்.[4]
நடித்துள்ள திரைப்படங்கள்
நடித்துள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கீழ்வருமாறு[5]
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1994 | காதலன் | ஸ்ருதி | தமிழ் | பிலிம்பேர் விருது |
1995 | பாட்சா | பிரியா | தமிழ் | |
1995 | ரகசியப் போலிஸ் | தமிழ் | ||
1995 | வில்லாதி வில்லன் | ஜானகி | தமிழ் | |
1996 | லவ் பேர்ட்ஸ் | தமிழ் | ||
1996 | மேட்டுக்குடி | தமிழ் | ||
1997 | ஜானகிராமன் | இந்து | தமிழ் | |
1997 | பெரிய தம்பி | செல்வி | தமிழ் | |
1997 | பிஸ்தா | வெண்ணிலா | தமிழ் | |
1997 | அரவிந்தன் | தமிழ் | ||
1998 | வேட்டிய மடிச்சு கட்டு | தமிழ் | ||
2001 | சிட்டிசன் | சிபிஐ அதிகாரி | தமிழ் | |
2001 | தீனா | குத்துப்பாடல் நடனக்காரியாக | தமிழ் |
மேற்கோள்கள்
- "Nagma plays mother" in The Hindu (18 July 2002), at
- As she herself has pointed out; see, e.g., "Revealed: Nagma's real Dad" in Mumbai Mirror (22 April 2006), online at http://www.icravebollywood.com/news/22april06/nagma.php and http://movies.indiatimes.com/articleshow/msid-1498649,curpg-5.cms .
- "Nagma excels in nine languages!" Idleburra.com (30 Nov.2006) at
- சில்மிஷக்காரர்கள் பிடியிலிருந்து நக்மாவை காப்பாற்ற காங்., முயற்சி
- Nagma Filmography