உயர் வர்க்கம்

ஒரு சமூகத்தில் அரசியல், பொருளாதார, சமய, கல்வி, சமூக, ஊடகவியல் முனைகளில் ஆதிக்கம் அல்லது அதிகாரம் செலுத்தும் மக்கள்குழு உயர் வர்க்கம் எனப்படுகின்றனர். பொதுவான சமூகப் கட்டமைப்பில் ஒர் சிறு மக்கள் குழுவே பல துறைகளிலும் குவியப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.


மேட்டுகுடி வர்க்கமும் உயர் வர்க்கமும்

தமிழ் கதையாடலில் உயர் வர்க்கத்தைக் குறிக்க மேட்டுகுடிகள், மேட்டுக்குடி வர்க்கம் என்ற சொற்தொடர் பயன்பாடும் உண்டு.

அரசர்களால் (சோழர்கள் உட்பட) தலித் மக்கள் ஒதுக்கப்பட்ட தாழ்ந்த நிலப்பரப்புகளிலேயே வாழமுடியும் என்ற சட்டம் இருந்தது. இதனால் மேட்டின் மீது வசிப்போரை, அதவாது உயர் செல்வாக்கு, அல்லது அதிகாரம் உள்ளோரை குறிக்க இப்பதம் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.[1]

பொருளாதாரம்

மேட்டுக்குடியினார் தொழில்துறைப் பெரும்முதலளாகளாகச் செயல்பட்டனர். உணவு, உடை, உறைவிடம் ஆகிய துறைகளின் மூதான அடிப்படை உற்பத்தி நடவடிக்கைகளைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இம்முதலாளினின் நோக்கமாக இருந்தது. இந்த அடிப்படை உற்பத்தித் துறைகளில் ஈடுபட்ட மக்களை தமது, தொழில்துறை உற்பத்திக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்களின் சார்பாளர்களாகப் பெரும்முதலாளிகள் மாற்றினர்.

- ம. செந்தமிழன். [2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம்.
  2. ம. செந்தமிழன். ஜூன் 8, 2008. "நவீன இந்திர சபையின் பேரவுத் திட்டம்." தமிழர் கண்ணோட்டம்

உசாத்துணைகள்

  • வின்செண்ட் ராஜ். (2004). சமரசம். கி.பி. 2001. இரண்டாம் பகுதி மேட்டுக்குடிகள். கன்னியாகுமாரி: NUDROS அறக்கட்டளை.

வெளி இணைப்புகள்

வர்க்கம் தொகு
வர்க்கம் | வர்க்க படிநிலை அடுக்கமைவு | சமூக அசைவியக்கம் | அடித்தட்டு வர்க்கம் | நடுத்தர வர்க்கம் | உயர் வர்க்கம் | en:Creative class | சாதி | பொருளாதார ஏற்றத்தாழ்வு | சமத்துவம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.