அந்தசுது குறியீடு
அந்தசுது குறியீடு அல்லது பெருமைநிலைக் குறியீடு என்பது ஒருவருடைய சமூக நிலையைப் புறநிலையாகக் காட்டுவதும், பொருளாதார அல்லது சமூகத் தகுதியைச் சுட்டுவதும் ஆகும். பல ஆடம்பரப் பொருட்கள் பெருமைநிலைக் குறியீடாகக் கருதப்படுகின்றன. அந்தசுது குறியீடுகள் எல்லா இடங்களில் ஒரே வகையாக இருக்க தேவையில்லை. எனினும் உலகமயமாதல் சூழலில் கூடுதலான உயர் வர்க்க மக்கள் ஒரே வகையான அந்தஸ்து குறியீடுகளை நாடுகின்றனர்.
வரலாற்றின் வெவ்வேறு காலப்பகுதிகளில் அந்தஸ்து குறியீடுகள் மாறி வந்திக்கின்றன. முன்னர் வசதி படைத்தோர் வெள்ளையாகவும் குண்டாகவும் இருப்பதை அந்தஸ்து குறியீடாக கருதினர். ஏன் என்றால் உடலுழைப்பு மிகுந்த முன்னைய காலப்பகுதியில் அவ்வாறு வேலை செய்ய தேவையற்ற வசதி படைத்தோர் குண்டாக இருப்பதை அந்தஸ்து குறியீடாக கருதினர். இன்று பெரும்பாலும் அமர்தியங்கும் வாழ்முறையை கொண்டிருப்பதால் அமெரிக்க போன்ற நாடுகளில் பெருந்தொகையினர் குண்டாக உள்ளனர். அதனால் ஒல்லியாக இருப்பதுவே அந்தஸ்து குறியீடாக பாக்கப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் பெருமைநிலை குறியீடு எடுத்துக்காட்டுகள்
- செல்வம்/திறமையால் பெற்ற அழகிய மனைவி/சிறந்த கணவன்
- பெரிய விலை உயர்ந்த வீடு
- வால் தெருவில் நிறுவன சட்டம்,நிதி, வங்கி அல்லது மேலாண்மை தகவுரைஞராக கூடுதல் ஊதியம் பெறுதல்
- விலையுயர்ந்த மகிழுந்துகள், சில விளையாட்டு பயனளி உந்துகள்,படகுகள் மற்றும் தனிப்பட்ட வானூர்திகள்.
- விலை உயர்ந்த கடிகாரம்: காட்டாக ரோலக்சு,ஓமேகா அல்லது படேக் பிலிப்.
- விலை உயர்ந்த உடை/நறுமணங்கள்: புரூக் பிரதர்சு, சவில் ரோ, சானல், புளூமிங்டேல், பர்பெர்ரி
- உயர்ந்த மனமகிழ் மன்றங்கள் உறுப்பினராதல்
- ஆடம்பர விடுமுறைகள்
- ஐவி லீக் எனப்படும் பழங்கால பாரம்பர்யம் மிகுந்த பல்கலைக்கழக படிப்பு: ஆர்வர்ட், யேல், பிரின்சுடன் அல்லது ஆக்சுபோர்ட், கேம்பிரிட்சு
- தனியார் கல்வி: பிலிப்சு எக்சுடர் அகாதெமி அல்லது இன்சுடூய்ட் லெ ரோசே.
- விலை உயர் நகைகள்: ஹாரி வின்சுடன்அல்லது டிஃபனி.
- விலை உயர் கருவிகள்: வீட்டு காட்சியரங்கங்கள்.
- பிரேசிலிய, இந்திய அல்லது ஆபிரிக்க அரிய மரங்களாலான பேனா அல்லது உயர்ந்த உலோகத்தினாலானவை கிராஸ் அல்லது வாடர்மேன்.
- பிளாட்டினம்,தங்கம்,வெள்ளி மற்றும் பிற உயர் உலோகங்களை சேமித்து வைத்தல்.
- இரத்தினம், முத்து
- விடுமுறை வீடுகள்
- திராட்சைத் தோட்டங்கள்
- தனியார் வங்கி சேவைகள்
- ஈரப்பதன் சமனாக்கப்பட்ட கூபா சிகார்களுக்கேயான அறை.