ஜோதிகா
ஜோதிகா (பிறப்பு - அக்டோபர் 18, 1978, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.[1] இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஜோதிகா | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜோதிகா சாதனா அக்டோபர் 18, 1978 ![]() |
துணைவர் | சூர்யா |
பிள்ளைகள் | தியா, தேவ் |
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- 2018 - காற்றின் மொழி
- 2015 - 36 வயதினிலே
- 2007 - மொழி
- 2006 - வேட்டையாடு விளையாடு
- 2006 - சில்லுனு ஒரு காதல்
- 2006 - சரவணா
- 2005 - ஜூன் ஆர்
- 2005 - மாயாவி
- 2005 - சந்திரமுகி
- 2004 - அருள்
- 2004 - பேரழகன்
- 2004 - மன்மதன்
- 2003 - திருமலை
- 2003 - த்ரீ ரோசஸ்
- 2003 - காக்க காக்க
- 2003 - தூள்
- 2003 - பிரியமான தோழி
- 2002 - ராஜா
- 2002 - லிட்டில் ஜான்
- 2002- 123
- 2001 - பூவெல்லாம் உன் வாசம்[2]
- 2001 - டும் டும் டும்
- 2001 - 12 பி
- 2001 - ஸ்டார்
- 2001 - தெனாலி
- 2000 - குஷி
- 2000 - ரிதம்
- 2000 - உயிரிலே கலந்தது
- 2000 - முகவரி
- 2000 - சிநேகிதியே
- 2000 - பூவெல்லாம் கேட்டுப்பார்
- 1999 - வாலி
விருதுகள்
- சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)
- சிறந்த நடிக்கைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)
மேற்கோள்கள்
- "Jo Jo Jyothika ...". பார்த்த நாள் நவம்பர் 27, 2016.
- "The Jyothika factor". The Hindu. பார்த்த நாள் நவம்பர் 27, 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.