லதா (நடிகை)

லதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். இவர் 1970கள் மற்றும் 1980களில் புகழ்பெற்ற நடிகையாக தென்னிந்திய திரையுலகில் இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது வள்ளியில் ராஜேஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

லதா
பிறப்புநளினி
சூன் 7, 1953(1953-06-07)
தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
சேதுபதி

லதா 7, ஜூன் 1953ல் இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர்.[1] இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். 1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்தார்[2][3]

திரை வாழ்க்கை

இவரது முதல் படமான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றி காரணமாகத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் நாயகியாக நடித்தார். அதனால் எம்.ஜி.ஆர் லதா என்று அறியப்படும் அளவிற்குப் புகழ்பெற்றார். எம்.ஜி.ஆர் சிபாரிசால் அக்கினேனி நாகேஸ்வர ராவின் நாயகியாக அந்தால ராமுடு என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். பிலிம்பேர் விருதுகள் மற்றும் கலைமாமணி விருது போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

கவனிக்கத்தக்க படங்கள்

ஆண்டுதிரைப்படம்மொழிகதாப்பாத்திரம்குறிப்பு
1973உலகம் சுற்றும் வாலிபன்தமிழ்லில்லி
1974நேற்று இன்று நாளைதமிழ்
1974சிரித்து வாழ வேண்டும்தமிழ்
1974உரிமைக்குரல்தமிழ்
1974சிவகாமியின் செல்வன்தமிழ்
1975பல்லாண்டு வாழ்கதமிழ்சரோஜா
1975நாளை நமதேதமிழ்ராணி
1975நினைத்ததை முடிப்பவன்தமிழ்மோகனா
1976உழைக்கும் கரங்கள்தமிழ்முத்தம்மா
1976மகாடுதெலுங்கு
1977நீதிக்கு தலைவணங்குதமிழ்
1977மீனவ நண்பன்தமிழ்
1977நவரத்தினம்தமிழ்
1977குருசேத்திரம்தெலுங்குச‌‌த்‌தியபாமா‌
1978மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்தமிழ்
1978சங்கர் சலீம் சைமன்தமிழ்
1978ஆயிரம் ஜென்மங்கள்தமிழ்சாவித்திரி
1979நீயாதமிழ்

சொந்த வாழ்க்கை

லதா சேதுபதி என்ற சிங்கப்பூர் தொழில் அதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன் மற்றும் கார்த்திக் என்ற இரு மகன்கள் உள்ளனர்..[2][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.