குஷ்பூ

குசுப்பூ (இயற்பெயர்: நக்கர்த் கான், பிறப்பு: செப்டம்பர் 29, 1970) தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.[1] தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.[2]

குசுப்பூ சுந்தர்
பிறப்புநக்கர்த் கான்
செப்டம்பர் 29, 1970 (1970-09-29)
மும்பை, மகாராட்டிரா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர், அரசியல்வாதி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1989 - தற்போது
அரசியல் கட்சிகாங்கிரசு
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
சுந்தர் சி. (1997-தற்போது வரை)
பிள்ளைகள்அவந்திகா , ஆனந்திதா

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்குறிப்புகள்
1988தர்மத்தின் தலைவன்தேவி
1989வருஷம் 16ராதிகா
வெற்றி விழாஜெயா
1990கிழக்கு வாசல்செல்வி
நானும் இந்த ஊருதான்
தாலாட்டு பாடவாநர்மதா
ஆரத்தி எடுங்கடி
நடிகன்கீதா
மை டியர் மார்த்தாண்டன்
பாட்டுக்கு நான் அடிமை
மைக்கேல் மதன காமராஜன்சாலினி சிவராமன்
1991நாட்டுக்கு ஒரு நல்லவன்ரேகா
விக்னேஷ்வர்
சின்ன தம்பிநந்தினி
கிழக்குக் கரைமகாலட்சுமி
பிரம்மாஜெனீபர்
இரவு சூரியன்
1992பாண்டியன்
அண்ணாமலைசுபு
மன்னன்மீனா
இது நம்ம பூமிநளினி
அம்மா வந்தாச்சுநந்தினி
பாண்டித்துரைமுத்துலட்சுமி
சேவகன்அஞ்சலி
சிங்காரவேலன்சுமதி
நாளைய செய்தி
ரிக்சா மாமா
1993மறவன்தங்கத்தாய்
புருச லட்சணம்அபிராமி (அம்மு)
உத்தம ராஜா
தர்ம சீலன்துர்கா
காத்திருக்க நேரமில்லைபவானி
பிரதாப்
ரோஜாவைக் கிள்ளாதேஅனு
வேடன்உஷா
கேப்டன் மகள்
ஜாதிமல்லிஸ்ரீ ரஞ்சினி
1994மனசு ரெண்டும் புதுசுலட்சுமி
வனஜா கிரிஜாவனஜா
நாட்டாமைலட்சுமி
இந்துசிறப்புத் தோற்றம்
வா மகளே வா
1995சின்ன வாத்தியார்
கருப்பு நிலா
முறை மாமன்இந்து
நாட்டுப்புற பாட்டு
வர்றார் சண்டியர்
என் பொண்டாட்டி நல்லவ
கோலங்கள்
முத்துக்குளிக்க வாரிகளா
தேடி வந்த ராசா
1996எனக்கொரு மகன் பிறப்பான்
இரட்டை ரோஜா
கோபாலா கோபாலா
1997கல்யாண வைபோகம்
தாலி புதுசு
பத்தினி
எட்டுப்பட்டி ராசா
1998கலர் கனவுகள்
ஜாலி
துள்ளித் திரிந்த காலம்தேவி
கல்யாண கலாட்டா
குரு பார்வை
பொண்ணு விளையிற பூமி
வீரத்தாலாட்டு
சிம்மராசி
வீரம் விளஞ்ச மண்ணு
1999மின்சார கண்ணா
உன்னைத் தேடிசிறப்புத் தோற்றம்
பொண்ணு வீட்டுக்காரன்
மனைவிக்கு மரியாதை
மலபார் போலிஸ்
சுயம்வரம்
குடும்பச் சங்கிலி
2000அலைபாயுதேசிறப்புத் தோற்றம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
மகளிர்க்காக
புரட்சிக்காரன்
உன்னை கண் தேடுதே
விரலுக்கேத்த வீக்கம்
சின்னச் சின்ன கண்ணிலேரதி
குரோதம் 2
கரிசக்காட்டு பூவே
சிம்மாசனம்
வீரநடை
2001விண்ணுக்கும் மண்ணுக்கும்
2002ஸ்ரீ பண்ணாரி அம்மன்சிறப்புத் தோற்றம்
2004காற்றுக்கென்ன வேலி
2005ஜூன் ஆர்
வெற்றிவேல் சக்திவேல்
2007வேகம்
பழனி
பெரியார்
2009வில்லுசிறப்புத் தோற்றம்
2010வாடாசிறப்புத் தோற்றம்
2011பொன்னர் சங்கர்
இளைஞன்
2013தீயா வேலை செய்யணும் குமாருசிறப்புத் தோற்றம்

நடித்த தொலைக்காட்சி நாடகங்கள்

நம்ம வீட்டு மகாலட்சுமி (தொலைக்காட்சி நிகழ்ச்சி)

அரசியல்

2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.[3][4] 2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.[5][6] பின்னர் 26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.