பாண்டித்துரை


பாண்டித்துரை (Pandithurai) என்ற திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் தமிழ் திரைப்பட இயக்குனர் மனோஜ் குமார் ஆவார். இப்படத்தில் பிரபு மற்றும் குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் திரைப்படம் 1992 ஜனவரி 15 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் 100 நாட்கள் ஓடியது. இந்த படம் 1993 ஆம் ஆண்டு தெலுங்கில் பாவா பாவமரிடி என்ற பெயரிலும், இந்தியில் 1998 ஆண்டு பந்தன் என்ற பெயரிலும், 2001ஆம் ஆண்டு கன்னடத்தில் பாவா பாமைடா என்றும் மொழிபெயர்க்கப்பட்டது.

பாண்டித்துரை
இயக்கம்மனோஜ் குமார்
தயாரிப்புகே. பாலு
கதைமனோஜ் குமார்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு, குஷ்பூ, ராதாரவி, மனோரமா, சுமித்ரா, சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, செந்தில், மன்சூர் அலிகான், மேஜர் சுந்தரராஜன் மற்றும் அஜய் ரத்னம்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்கே. பி. பிலிம்ஸ்
விநியோகம்கே. பி. பிலிம்ஸ்
வெளியீடு15 ஜனவரி1992
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

  • பாண்டித்துரையாக பிரபு
  • முத்துலட்சுமியாக குஷ்பூ
  • மலைச்சாமியாக ராதாரவி
  • பாண்டித்துரையின் அம்மாவாக மனோரமா
  • பாண்டித்துரையன் சகோதரியாக சுமித்ரா
  • சிந்தாமணியாக சில்க் ஸ்மிதா
  • மயில்சாமியாக கவுண்டமணி,
  • சோழாவாக செந்தில
  • சிந்தாமணியின் சகோதரர் நரசிம்மாவாக மன்சூர் அலிகான்
  • மேஜர் சுந்தரராஜன்
  • ருத்ரமணியாக அஜய்ரத்னம்
  • சிங்கமுத்து

இசை

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.1992 இல் திரைப்படத்திற்கான இசை வெளியிடப்பட்ட து. இந்த திரைப்படத்தின் பாடல்கள் வாலி, கங்கை அமரன் மற்றும் பயிரிசுதன் ஆகியோரால் எழுதப்பட்டது . இப்படத்தின் பாடல்கள் ஆறு தடங்கள் முறையில் பதியப்பட்டது.[1][2]

வரவேற்பு

ஒரு கிராமத்தில் பாரம்பரியம் கொண்ட குடும்பம் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை இப்படத்தின் கதை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது,[3]

கதைக்களம்

பாண்டித்துரையின் சகோதரியாகிய சுமித்ராவிற்கு திருமணம் நடைபெறுகிறது. தம்பியாகிய பாண்டித்துரையைப் பிரிய மனமில்லாமல் பிறந்த வீட்டு சீதனமாக அவருடன் அழைத்துச் செல்கிறாள் , இதற்கு அவரின் கணவர் மலைச்சாமி ஆகிய ராதாரவி சம்மதிக்கிறார், பாண்டித்துரை மாமாவின் வார்த்தையே தனது செயலாக வாழ்கிறான். தனது மாமாவை மதிக்காத எவரையும் விட்டுவைப்பதில்லை. இதற்கிடையில் மாமன் மகளான முத்துலட்சுமி வெளியூரில் படித்துவிட்டு ஊருக்கு திரும்புகிறாள். அந்த ஊரின் காவல் துறை அதிகாரி ருத்ரமணியின் அநியாயச் செயலை பொறுக்காமல் பாண்டித்துரையின் மாமா மலைச்சாமி அவருடன் வாதிடுகிறார். பாண்டிதுரை மாமாவிற்காக ருத்ரமணியுடன் சண்டையிடுகிறார். பாண்டித்துரையின் அறியாமையையும், வீரத்தையும் பார்த்து முத்துலட்சுமி அவனின் மீது அன்பு கொள்கிறாள். மேலும் அவனுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கிறாள். பாண்டித்துரையை முத்துலட்சுமி காதலிக்க ஆரம்பிக்கிறாள். இதற்கிடையில் மலைச்சாமி அந்த ஊருக்கு வரும் நாட்டியக்காரி சிந்தாமணியின் மீது மோகம் கொள்கிறான். மலைச்சாமி ஊர் திருவிழாவின்போது பாண்டித்துரைக்குப் பதிலாக சிந்தாமணியின் சகோதரன் நரசிம்மனை பரிவட்டம் கட்டச் சொல்கிறான், இதன் காரணமாக பாண்டித்துரை மற்றும் முத்துலட்சுமியின் நிச்சயதார்த்தம் தடைபடுகிறது. பாண்டிதுரை சிந்தாமணியை விபச்சார வழக்கில் கைது செய்ய காவல்துறை அதிகாரியுடன் செல்லும்போது அங்கு மலைச்சாமிையப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதில் இருந்து மீள்வதற்காக மலைச்சாமி சிந்தாமணியைத் திருமணம் செய்து கொள்கிறார். மலைச்சாமி முத்துலட்சுமியை சிந்தாமணியின் தம்பி நரசிம்மாவிற்குத் திருமணம் செய்ய திட்டமிடுகிறார். நரசிம்மா முத்துலட்சுமியை நிச்சயம் செய்ய வருகிறான் . முத்துலட்சுமி நரசிம்மவின் சுய ரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறாள். மலைச்சாமி உண்மையை உணர்ந்து நரசிம்மாவை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறான். நரசிம்மா இது என் வீடு என்றும் மலைச்சாமி தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்கிறான். இந்த வீட்டை தனது அக்கா சிந்தாமணி பெயருக்கு எழுதிக் கொடுத்ததாக சொல்கிறான். வேறு வழியில்லாமல் மலைச்சாமி குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். மனம் திருந்திய மலைச்சாமி பிரபுவின் வீட்டிற்கு செல்கிறான். பாண்டிதுரை மாமாவை வரவேற்று ஏற்றுக் கொள்கிறான். இதற்கிடையே நரசிம்மா சிந்தாமணியை வீட்டை விட்டு வெளியேற்றியதைச் சொல்கிறான். அதை ஏற்க மறுத்து மலைச்சாமியிடம் மன்னிப்பு கோர செல்கிறாள்.நரசிம்மா அவளைத் தடுத்து சிந்தாமணியைக் கொலை செய்து அந்தப் பழியை மலைச்சாமி மீது போடுவதாக சொல்கிறான். சிந்தாமணியைக் கொலையும் செய்கிறான். இவை அனைத்தும் அவனுக்கு தெரியாமலே ஒலி நாடாவில் பதிவாகிறது. காவல்துறை அதிகாரி சிந்தாமணியின் சாவிற்கு மலைச்சாமி தான் காரணம் என்று கருதி மலைச்சாமியைக் கைது செய்கிறார். இதை அறிந்த பாண்டித்துரை தான் தான் சிந்தாமணியைக் கொலை செய்ததாக குற்றத்தை ஏற்றுக் கொள்கிறான். அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கிடையில் முத்துலட்சுமியை திருமணம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. பாண்டித்துரை முத்துலட்சுமி திருமணம் நடைபெறுகிறது. நரசிம்மா வீட்டிலிருந்து ஒலிநாடா தற்செயலாக ஒரு சிறுவனின் கையில் கிடைக்கிறது. கோயில் ஒலிபெருக்கியில் அது ஒளிபரப்பப் படுகிறது. இதைக் காவல்துறையினரும் ஊர் மக்களும் கேட்கிறார்கள். பாண்டித்துரை நிரபராதி என்று நிரூபணமாகிறது. நரசிம்மா கைது செய்யப்படுகிறான். பாண்டித்துரையும் முத்துலட்சுமியும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.

மேற்கோள்கள்

  1. "Paandithoorai - Illayaraja". thiraipaadal.com. பார்த்த நாள் 2012-04-30.
  2. "Find Tamil Movie Pandithurai". jointscene.com. பார்த்த நாள் 2012-04-30.
  3. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920207&printsec=frontpage&hl=en
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.