கிழக்கு வாசல் (திரைப்படம்)
கிழக்கு வாசல் என்பது ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1986ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், ரேவதி, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிறந்த வெற்றிப்படமான இது சென்னையில் 150 நாட்களைக் கடந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் 100 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது. நடிகர் கார்த்திக் தமிழ்த் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ள இப்படமே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[1]
கிழக்கு வாசல் | |
---|---|
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
தயாரிப்பு | ஜி. தியாகராஜன் ஜி. சரவணன் |
கதை | எம். எஸ். மாது |
திரைக்கதை | ஆர். வி. உதயகுமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் ரேவதி குஷ்பூ சின்னி ஜெயந்த் மனோரமா விஜயகுமார் ஜனகராஜ் |
ஒளிப்பதிவு | அப்துல் ரகுமான் |
படத்தொகுப்பு | ஜி. ஆர். அணில் மல்நாத் |
கலையகம் | சத்ய ஜோதி பிலிம்சு |
விநியோகம் | சத்ய ஜோதி பிலிம்சு |
வெளியீடு | சூலை 13, 1986 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கார்த்திக் – பொன்னுரங்கம்
- ரேவதி – தாயம்மா
- குஷ்பூ – செல்வி
- சின்னி ஜெயந்த் – மாக்கான்
- மனோரமா
- விஜயகுமார்
- ஜனகராஜ்
- சண்முகசுந்தரம்
- தியாகு
- சுலக்சனா
- எஸ். என். பார்வதி
- கல்லாப்பெட்டி சிங்காரம்
மீளுருவாக்கங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | இயக்குநர் |
---|---|---|---|---|
1992 | மேரே சஜான சாத் நிபானா | இந்தி | மிதுன் சக்கரவர்த்தி | ராஜேஷ் வாகில் |
1992 | சிந்துறா திலகா | கன்னடம் | சுனில், மாலாஸ்ரீ, சுருதி | சாய் பிரகாஷ் |
1995 | சிலகபச்சா காபுறம் | தெலுங்கு | ஜகபதி பாபு, மீனா, சௌந்தர்யா | கோடி ராமகிருஷ்ணா |
பாடல்கள்
இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை. ரேவதி தோன்றும் பாடலான வந்ததே ஓ குங்குமம் பாடல் மோகன ராகத்தில் உருவானதாகும். இப்பாடலை பாடிய புகழ்பெற்ற பாடகி சித்ரா சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசின் திரைப்பட விருதைப் பெற்றார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | "அட வீட்டுக்கு வீட்டுக்கு" | இளையராஜா | வாலி |
2 | "பச்சைமலை பூவு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ஆர். வி. உதயகுமார் |
3 | "தலுக்கி தலுக்கி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
4 | "பாடிப் பறந்தகிளி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
5 | "வந்ததே குங்குமம்" | சித்ரா | |
மேற்கோள்கள்
- "A story to tell". The Hindu. 2007-10-22. http://www.hindu.com/mp/2007/10/22/stories/2007102250440200.htm. பார்த்த நாள்: 2015-03-13.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.