இரட்டை ரோஜா

இரட்டை ரோஜா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 12 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பம் மற்றும் பாச பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1] இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்கா செல்லலு என்ற தெலுங்கு மொழி தொடரின் தமிழ் தயாரிப்பாகும்.[2]

இரட்டை ரோஜா
வகை
இயக்கம் மணிகண்ட குமார்
நடிப்பு
  • ஷிவானி நாராயணன்
  • அக்‌ஷய் கமல்
  • நிமேஷ் சாகர்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பு நாராயணன்
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஸ்ருதி ஸ்டூடியோஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 12 ஆகத்து 2019 (2019-08-12)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

இந்தத் தொடரின் நாயகியாக அனு மற்றும் அபியாக இரட்டைக் கதாபாத்திரங்களில் ஷிவானி நாராயணன் நடிக்கிறார். அண்ணனாக நிமேஷ் சாகர், தம்பியாக அக்‌ஷய் நடிக்கிறார்கள். மணிகண்ட குமார் இந்தத் தொடரை இயக்க, ஸ்ருதி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் நாராயணன், இந்தத் தொடரையும் தயாரிக்கிறார்.[3][4][5]

கதைச்சுருக்கம்

இரட்டை சகோதரிகளான அனு, அபி இருவரும் ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும், எதிரெதிர் துருவங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அக்கா அனு சுயநலம் கொண்டவள். தனக்கான விஷயத்தை மட்டுமே யோசிப்பவள். தங்கை அபி அனுவுக்கு நேரெதிர், அபி. குடும்பத்துக்காகவே யோசிப்பவள். இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பியை மணப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும், தீர்வுகளும்தான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • ஷிவானி நாராயணன் - அபி
    • குடும்பத்துக்காகவே யோசித்து, அவர்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் துணியும் தன்மையுள்ளவளாக இருக்கிறார்.
  • ஷிவானி நாராயணன் - அனு
    • அக்காவான அனு, தனக்கான விஷயத்தை மட்டுமே யோசிப்பவர், சுயநல குணம் கொண்டவர்.
  • அக்‌ஷய் கமல்[6] - சஞ்சீவ்
    • சந்தோஷின் தம்பி கோபக்கார குணம் கொண்டவன்.
  • நிமேஷ் சாகர் - சந்தோஷ்
    • ஒழுக்கமான பையன் சஞ்சீவின் அண்ணன்.

துணை கதாபாத்திரம்

நடிகர்களின் தேர்வு

இந்தத் தொடரின் நாயகியாக பகல் நிலவு தொடர் புகழ் ஷிவானி நாராயணன், அனு மற்றும் அபியாக இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அண்ணனாக நிமேஷ் சாகர், தம்பியாக அக்‌ஷய் நடிக்கிறார்கள் இவர் ராஜா ராணிராஜா ராணி தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவானியின் அப்பாவாக பிரபல நடிகர் பூவிலங்கு மோகன் நடிக்கிறார். அம்மாவாக சபிதா ஆனந்த் நடிக்கிறார். நாயகனின் அப்பாவாக ராஜாவும், அம்மாவாக தமிழ்ச்செல்வியும் நடிக்கிறார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மதியம் 2:00 மணிக்கு
Previous program இரட்டை ரோஜா
(12 ஆகத்து 2019 - ஒளிபரப்பில்)
Next program
நிறம் மாறாத பூக்கள்
(9 அக்டோபர் 2017 - 9 ஆகஸ்ட் 2019)
-
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.