நிறம் மாறாத பூக்கள் (தொலைக்காட்சித் தொடர்)
நிறம் மாறாத பூக்கள் என்பது 2017 ல் ஜீ தமிழ் தொலைகாட்சியில் அக்டோபர் 9, முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 12, 2019 ஆம் ஆண்டு முதல் மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ம. இனியன் தினேஷ் மற்றும் ப.நிரவி பாண்டியன் என்பவர் இயக்க, முரளி, நிஷிமா, விஷ்ணுபிரியா தரிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.[2] இந்த தொடரை பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி தயாரிக்கிறார்.[3][4]
நிறம் மாறாத பூக்கள் | |
---|---|
![]() | |
வகை | காதல் நாடகம் |
எழுத்து | ச. குமரேசன் |
இயக்கம் | ம. இனியன் தினேஷ் ப.நிரவி பாண்டியன் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
தயாரிப்பு | நீலிமா ராணி[1] |
தொகுப்பு | ச. முகேஷ் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
முதல் ஒளிபரப்பு | 9 அக்டோபர் 2017 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
கதைச்சுருக்கம்
ராம் மற்றும் வெண்மதி சிறுவயது நண்பர்களாக இருக்கும் போது இருவரும் காதலித்தனர், ஒரு விபத்தில் ராம் பழைய நினைவுகளை மறந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதே நிலையில் சென்னைக்கு வருகின்றார், சில வருடம் கழிந்து ராம் கீர்த்தி எனும் பெண்ணை காதலிக்கிறார். தனது இளம் வயது காதலனை தேடி சென்னைக்கு வரும் வெண்மதி மறுபடியும் ராமை சந்திக்கிறாள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராம் வெண்மதியை திருமணம் செய்கின்றான். இந்த விடயம் கீர்த்திக்கு தெரியவர இவர்களின் மூவரின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது தான் கதை.
நடிகர்கள்
- முரளி - ராம்
- நிஷிமா - கீர்த்தி
- அஷ்மிதா (பகுதி:1-49) → விஷ்ணுபிரியா (பகுதி:50) - வெண்மதி ராம்
- தரிஷ் - சதிஷ்
- அரவிந்த்
- ரவி
- டேவிட்
- ராஜ்
- நேஹா
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆண்டு | விருது | பரிந்துரை | பெறுநர் | முடிவு |
---|---|---|---|---|
2018 | 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] | மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை | நிஷிமா | பரிந்துரை |
விஷ்ணுபிரியா | பரிந்துரை | |||
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் | முரளி | பரிந்துரை |
இவற்றை பார்க்க
மேற்கோள்கள்
- "நீலிமா ராணி தயாரிக்கும் மெகா தொடர்." (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actress-neelima-rani-turns-producer-with-daily-soap/articleshow/61018682.cms.
- "'Niram Maratha Pookal' on Zee Tamil Tv" (in en). www.newstechcafe.com. http://www.newstechcafe.com/2017/10/niram-maratha-pookal-on-zee-tamil-tv.html#axzz4xxxhM2GP.
- "Actress Neelima Rani turns producer" (in en). www.deccanchronicle.com. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/071017/actress-neelima-rani-turns-producer.html.
- "நீலிமா ராணி தயாரிக்கும் புதிய தொடர் நிறம் மாறாத பூக்கள்" (in ta). cinema.dinamalar.com. http://cinema.dinamalar.com/tamil-tv-serials/63390/Chinna-thirai-Television-News/neelima-to-produce-tv-serial.htm.
- "ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல்" (in ta). tamil.thehindu.com. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25066022.ece.
வெளி இணைப்புகள்
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி பகல் 1:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | நிறம் மாறாத பூக்கள் (12 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்) |
Next program |
தேவதையை கண்டேன் (9 அக்டோபர் 2017 – 9 ஆகஸ்ட் 2019) |
- |
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி பகல் 2 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | நிறம் மாறாத பூக்கள் (9 அக்டோபர் 2017 – 9 ஆகஸ்ட் 2019) |
Next program |
- | இரட்டை ரோஜா (12 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்) |