ராஜாமகள் (தொலைக்காட்சித் தொடர்)

ராஜாமகள் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 28 அக்டோபர் 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இரு குடும்ப வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பம் மற்றும் பாச பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரில் துளசியாக ஐரா நடிக்கின்றார்[3] இவர் கண்மணி, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரியாஸ் நடிக்கிறார். வனஜா, பரத் கல்யாண், காயத்ரி பிரியா, பரதன் ஆகியோரும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரக்த சம்பந்தம் என்ற தெலுங்கு மொழி தொடரின் மறு தயாரிப்பாகும்.

ராஜாமகள்
படிமம்:.jpg
வகை
  • குடும்பம்
  • நாடகம்
நடிப்பு
  • ஐரா
  • ரியாஸ்
  • வனஜா
  • காயத்ரி பிரியா
  • பரத் கல்யாண்
  • பரதன்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 28 அக்டோபர் 2019 (2019-10-28)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

கதைச்சுருக்கம்

அண்ணன் தங்கையான சிவகாமிக்கு ஆண் குழந்தையும் அண்ணன் ராஜனின் மனைவிக்கு பெண் குழந்தையும். பிறக்கின்றது. பெண்குழந்தையை வெறுக்கும் அண்ணி இதனால் தனது குழந்தையை யாருக்கும் தெரியாமல் மாத்தி வைக்கின்றார் சிவகாமி. குழந்தைகள் வளந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களின் குடும்பத்தில் ஏற்படும் முரண் காரணமாக உருவாகும் பிரச்னைகளை மையமாக வைத்து காதல், பொறாமை, தியாகம் என இந்தத் தொடர் நகர்கிறது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • ஐரா - துளசி
  • ரியாஸ் - விஷ்வா

துணை கதாபாத்திரம்

  • வனஜா
  • காயத்ரி பிரியா
  • பரத் கல்யாண்
  • பரதன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி பிற்பகல் 2:30 மணிக்கு
Previous program ராஜாமகள்
(28 அக்டோபர் 2019 - ஒளிபரப்பில்)
Next program
- -
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.