கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்)

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 1 ஏப்ரல் 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி, சூலை 8, 2019 ஆம் ஆண்டு முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
வகை
இயக்கம் ராம் குமாரதாஸ்

கே. சுலைமான்

நடிப்பு
  • கிருஷ்ணா பிரியா
  • விஷ்ணு உன்னிகிருஷ்ணன்
  • சீமா
  • அனு
  • மது மோகன்
  • அன்பழகன்
  • அமிர்தா வர்மன்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
தொகுப்பு சி. சஜின்
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 1 ஏப்ரல் 2019 (2019-04-01)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்
காலவரிசை
முன் பூவே பூச்சூடவா

இந்த தொடரில் புதுமுக நடிகை கிருஷ்ணா பிரியா, பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக டிக் டாக் மற்றும் சரவணன் மீனாட்சி (பகுதி 3), அரண்மனை கிளி போன்ற தொடர்களில் நடித்த விஷ்ணு உன்னிகிருஷ்ணன், விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் பிரபல நடிகை சீமா, மது மோகன், அன்பழகன், அமிர்தா வர்மன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.[1]

இந்த தொடரின் கதை பிரீத்தி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள், விக்ரம் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். இருவரும் காதலிக்கிறார்கள் ஆனால் இவர்கள் சேர்ந்தால் விக்ரம் குடும்பத்தின் சாபத்தின் படி விக்ரம் இறந்து விடுவான். சாபத்தை மீறி இவர்கள் எப்படி வாழ்வில் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் கதை. இந்த தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் 4.3% பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

  • கிருஷ்ணா பிரியா - பிரீத்தி
  • விஷ்ணு உன்னிகிருஷ்ணன் - விக்ரம்
  • சீமா[2] - அஞ்சனா தேவி (விக்ரமின் பாட்டி)
  • அனு
  • மது மோகன்
  • அன்பழகன்
  • அமிர்தா வர்மன்

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6 மணி தொடர்கள்
Previous program கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
(4 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)
Next program
இனிய இரு மலர்கள் -
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
Previous program கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
(8 சூலை 2019 – 2 நவம்பர் 2019)
Next program
சத்யா
(24 மே 2019 - 5 சூலை 2019) மறுஒளிபரப்பு
பிரியாத வரம் வேண்டும்
(4 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 7:30 மணி தொடர்கள்
Previous program கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
(1 ஏப்ரல் 2019 – 5 சூலை 2019)
Next program
பூவே பூச்சூடவா
(25 பெப்ரவரி 2019 - 30 மார்ச் 2019)
பூவே பூச்சூடவா
(8 சூலை 2019 - ஒளிபரப்பில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.