யாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்)

யாரடி நீ மோகினி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஏப்ரல் 24, 2017 முதல் திங்கள் முதல் சனிவரை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில், மீயியற்கை, காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர்.[1][2][3] இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, ஸ்ரீ குமார், நச்சத்திரா, சைத்ரா, யமுனா, பாத்திமா பாபு, தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த தொடர் மிக பொருள் செலவில் எடுக்கப்படுள்ள தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.[4]

யாரடி நீ மோகினி
வகை
எழுத்து இ. அசோகன்
இயக்கம் என். பிரியன்
திரைக்கதை எம். ஆர். பான் இளங்கோ (உரையாடல்)
நடிப்பு
  • ஸ்ரீ குமார்
  • நச்சத்திரா
  • பாத்திமா பாபு
  • சைத்ரா
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பு வி. ஷங்கர் ராமன்
மது மோகன்
தொகுப்பு தி. அஜி
ஒளிப்பதிவு மா. போ ஆனந்த்
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு
நிறுவனங்கள்
கே. ஸ்டுடியோ
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 24 ஏப்ரல் 2017 (2017-04-24)
இறுதி ஒளிபரப்பு ஆரம்பம்
காலவரிசை
முன் சொல்வதெல்லாம் உண்மை
புற இணைப்புகள்
வலைத்தளம்

இந்த தொடர் அதிகம் பார்க்கும் தொடர்களில் சிறந்த 5 தொடர்களுக்குள் அடங்கும், அதே தருணம் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக மொழிகளில் மறுதயாரிப்பு செய்த தொடரும் இதுவாகும். தமிழிருந்து ஒடியா மொழியில் முதல் முதலில் மறுதயாரிப்பு செய்த தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்

பணக்கார குடும்பத்தை சேர்ந்த முத்தரசன் தாயை இழந்து சித்தியின் அரவணைப்பில் வளர்கிறான். முத்தரசனின் மனைவி சித்ரா இறக்க, சித்தி நீலாம்பரி தனது அண்ணன் மகளான ஸ்வேதாவை முத்தரசனுக்கு கட்டிவைத்து சொத்தை முழுவதுமாக அடைய திட்டமிடுகிறாள். ஆனால் சிறு வயதிலிருந்தே தன் மாமன் முத்தரசனை திருமணம் செய்ய வேண்டும் என்று அவனையே சுத்தி சுத்தி வருகிறாள், வெண்ணிலா. இதே தருணத்தில் தனது இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கி வெண்ணிலாவையு ம் முத்தரசனையும் சேர்த்து வைக்க நினைக்கும் ஆவி. கேட்டவர்களுக்கு ஆவிக்கும் நடக்கும் யுத்தத்தில் யார் ஜெகிக்க போகின்றார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்

  • சஞ்சீவ் (பகுதி:1- 270) → ஸ்ரீ குமார் (பகுதி: 271) - முத்தரசன் (முத்து)
  • நச்சத்திரா - வெண்ணிலா
  • சைத்ரா - சுவேதா
  • யமுனா - சித்திரா
  • பேபி லிசா - ருத்திரா
  • பாத்திமா பாபு - நீலாம்பரி
  • தீபா - பூங்கோதை
  • ஹாரிஸ் -
  • முரளி கிருஷ்ணா - ரத்னவேல் பாண்டி
  • மகிமா தேவி - ராணி
  • பரத் - மருது
  • உதயா - தென்னரசு
  • அரவிந்த் - அழகப்பன்
  • ஷியாம் - யுவராஜ்

மறுதயாரிப்பு மற்றும் மொழிமாற்று

இந்திய தொடர்களில் அதிக மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்ட தொடர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி தலைப்பு வடிவம் அலைவரிசை ஆண்டு
தமிழ் யாரடி நீ மோகினி ஜீ தமிழ் 24 ஏப்ரல் 2017
கன்னடம் யாரே நீ மோகினி மறுதயாரிப்பு ஜீ கன்னட 18 செப்டம்பர் 2017
தெலுங்கு எவேரே நுவூ மோகினி மறுதயாரிப்பு ஜீ தெலுங்கு 11 டிசம்பர் 2017 - 4 மே 2018
ஒடியா மு பி அர்தங்கினி மறுதயாரிப்பு ஜீ சார்தக் 9 ஜூலை 2018
மலையாளம் ஆரானி சுந்தரி மொழிமாற்று ஜீ கேரளம் 26 நவம்பர் 2018
இந்தி மெயின் பீ அர்தங்கினி மறுதயாரிப்பு & தொலைக்காட்சி 21 சனவரி 2019

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகர் சஞ்சீவ் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த வில்லி சைத்ரா பரிந்துரை
சிறந்த தொடர் யாரடி நீ மோகினி பரிந்துரை
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] சிறந்த தொடர் யாரடி நீ மோகினி பரிந்துரை
சிறந்த கற்பனை தொடர் யாரடி நீ மோகினி பரிந்துரை
விருப்பமான கதாநாயகி நச்சத்திரா பரிந்துரை
விருப்பமான கதாநாயகன் ஸ்ரீகுமார் பரிந்துரை
சிறந்த நடிகை நச்சத்திரா பரிந்துரை
சிறந்த நடிகர் ஸ்ரீகுமார் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த ஜோடி ஸ்ரீகுமார் & நச்சத்திரா பரிந்துரை
சிறந்த நேரடி கற்பனை தொடர் யாரடி நீ மோகினி style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த துணை நடிகை வனிதா பரிந்துரை
யமுனா பரிந்துரை
கிராமத்து தேவதை நச்சத்திரா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறப்பு விருது பாத்திமா பாபு style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த வில்லி பாத்திமா பாபு பரிந்துரை
சைத்ரா பரிந்துரை
சிறந்த நகைச்சுவையாளர் அரவிந்த் பரிந்துரை

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 8:30 மணிக்கு
Previous program யாரடி நீ மோகினி Next program
சொல்வதெல்லாம் உண்மை N/A
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.