பிரியாத வரம் வேண்டும் (தொலைக்காட்சித் தொடர்)
பிரியாத வரம் வேண்டும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 17 சூன் 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் கற்பனை தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரின் நாயகியாக புதுமுக நடிகை மதுமிதா ஏழை பெண்ணாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரிஷி என்ற கதாபாத்திரத்தில் விமல் வெங்கடேசன் பணக்காரவீட்டு பையனாக நடிக்கின்றார். அ. இராமச்சந்திரன் என்பவர் இந்த தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடருக்காக 2 கோடி ரூபாவில் பிரமாண்டமான அரண்மனை வீடு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[2]
பிரியாத வரம் வேண்டும் | |
---|---|
![]() | |
வகை |
|
எழுத்து | ராஜ்பிரவு |
இயக்கம் | அ. இராமச்சந்திரன் |
திரைக்கதை | நா. நமசிவாயம் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
தயாரிப்பு | கி.பாலமுருகன் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
முதல் ஒளிபரப்பு | 17 சூன் 2019 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
கதைச்சுருக்கம்
முன் ஜென்மத்தில் காதலிக்கும் ரிஷி மற்றும் துர்கா. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துர்காவை ரிஷியின் குடும்பத்தினர் கொலை செய்கிறா ர் . கதாநாயகனும் கொல்லப்படுகிறான். 300 வருடம் கழித்து மறுபடியும் சந்திக்கும் காதல் ஜோடிகள். இந்த ஜென்மத்திலும் இவர்களின் காதலுக்கு எதிராக இருக்கும் குடும்பம். தடைகளை தாண்டி முன் ஜென்மத்தில் கதாநாயகனை கொலை செய்தது யார்? இந்த ஜென்மத்தில் இவர்க ள் எப்படி ஒன்று சேரப்போகின்றார்கள் என்பது தான் கதை.
நடிகர்கள்
- விமல் வெங்கடேசன் - ரிஷி
- மதுமிதா - துர்கா
- பிரியங்கா
- மாமில்லா ஷைலஜா பிரியா - சித்ரா
- தேஷிகா ஜெகநாதன்
- ஐஸ்வர்யா சேசாத்ரி
மேற்கோள்கள்
- "பிரியாத வரம் வேண்டும் - புதிய தொடர்". www.onenov.in.
- "``இதைப் பார்த்தா ஒரு சினிமா ஃபீல் வரும்! சீரியலுக்காக 17,500 சதுர அடியில் பிரமாண்ட செட்!". cinema.vikatan.com.
வெளி இணைப்புகள்
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | பிரியாத வரம் வேண்டும் (4 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்) |
Next program |
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (8 சூலை 2019 – 2 நவம்பர் 2019) |
- |
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 7 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | பிரியாத வரம் வேண்டும் (17 சூன் 2019 - 2 நவம்பர் 2019) |
Next program |
அழகிய தமிழ் மகள் (28 ஆகத்து 2017 – 14 சூன் 2019) |
நாச்சியார்புரம் (4 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்) |