கடைக்குட்டி சிங்கம் (தொலைக்காட்சி நாடகத் தொடர்)

கடைக்குட்டி சிங்கம் என்பது விஜய் தொலைக்காட்சியில் 11 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பான காதல், பாசம், குடும்பம் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இத்தொடரில் பகல் நிலவு தொடரில் நடித்த அசீம் மற்றும் கண்மணி தொடரில் நடித்த இரா அகர்வால் இருவரும் மருது மற்றும் மீனாட்சி என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், அண்ணன் முத்து கதாபாத்திரத்தில் வேலு லட்சுமணன் என்ற புதுமுக நடிகர் நடித்துள்ளார்.[1] 20 ஜூலை 2019ஆம் ஆண்டு அன்று 113 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

கடைக்குட்டி சிங்கம்
வகை குடும்பம்
காதல்
நாடகம்
இயக்கம் ரவி பிரியன்
நடிப்பு
  • முகம்மது அஸீம்
  • இரா அகர்வால்
  • வேலு லட்சுமணன்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
இயல்கள் 113
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 11 மார்ச்சு 2019 (2019-03-11)
இறுதி ஒளிபரப்பு 20 ஜூலை 2019

இது ஒரு கிராமத்துக் கதை கொண்ட தொடர். முத்து, மருது என்ற இரு பாசக்கார அண்ணன் தம்பிகளுக்குள் மீனாட்சி என்னும் அழகான பெண் வரும்போது நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை சொல்லபடுக்குகின்றது. இத் தொடரை ரவி பிரியன் இயக்கியுள்ளார்.

கதைச்சுருக்கம்

முத்து (வேலு லட்சுமணன்), மருது (முகம்மது அஸீம்), எனும் இரு பாசக்கார அண்ணன் தம்பிகள். அண்ணன் முத்துவுக்கு மீனாட்சி (இரா அகர்வால்/ஷிவானி நாராயணன்) என்னும் அழகான கனிவான இதயம் கொண்ட பெண்ணை நிச்சயிக்க முடிவு செய்கின்றார்கள். ஆனால், முத்து, மீனாட்சியிடம் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை நீங்கள் தன இந்த திருமணத்தை நிறுத்தனமும் என்று சொல்ல இதனால் மீனாட்சி தனக்கு முத்துவை பிடிக்கல என்று சொல்லுகின்றார்.

இது பற்றி தெரியாத மருது, தன் அண்ணனை வேண்டாம் என்று சொன்ன மீனாட்சி மீது கோபம் கொண்டு அவருக்குத் பல தொல்லைகள் கொடுக்கிறார். அதைக் பொறுத்து கொண்டு உண்மையை சொல்லாமல் இருக்கிறார் மீனாட்சி. மருது அந்த உண்மை தெரியும்போது அதன்பின் நடக்கப் போகும் பரபரப்பான சம்பவங்கள் மையமாக வைத்து இந்த தொடர் நகர்கின்றது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • ஷிவானி நாராயணன் (பகுதி:1-17) → இரா அகர்வால் (பகுதி:18-) - மீனாட்சி
  • முகம்மது அஸீம் - மருது
  • வேலு லட்சுமணன் - முத்து

துணை கதாபாத்திரங்கள்

  • ஷர்மிளா
  • சிவாங்கலா - நளினிகாந்த் (மருதையின் தந்தை)
  • கே. நட்ராஜ்
  • சுமங்கலி
  • மணி கே. எல்.
  • டேவிட் சாலமன் ராஜா
  • அனுபாகன் "அம்பு"
  • மீனாட்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 5:30 மணிக்கு
Previous program கடைக்குட்டி சிங்கம்
(11 மார்ச்சு 2019 – 20 ஜூலை 2019)
Next program
பகல் நிலவு
(21 சனவரி 2019 - 9 மார்ச் 2019)
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
(22 சூலை 2019 – ஒளிபரப்பில்) மறு ஒளிபரப்பு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.