ஈரமான ரோஜாவே (தொலைக்காட்சித் தொடர்)

ஈரமான ரோஜாவே விஜய் டிவியில் ஜுலை 9 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர்.[1] இந்த தொடரில் மலராக பவித்ரா நடிக்கிறார். புதுமுக நடிகர் திரவியம் வெற்றியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் குமரன் தங்கத்துரை, ஷாம், நிஷா போன்ற பலர் நடிக்கிறார்கள். இந்தத் தொடரை பிரான்சிஸ் கதிரவன் இயக்குகிறார். ஒளிப்பதிவு ரமேஷ் துரை, இசை எம்ஆர்.[2]

ஈரமான ரோஜாவே
வகை காதல்
குடும்பம்
எழுத்து சந்துரு துரையப்பா
இயக்கம் பிரான்சிஸ் கதிரவன்
நடிப்பு
  • பவித்ரா
  • திரவியம்
  • குமரன்
  • ஷாம்
முகப்பிசைஞர் எம்ஆர்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
இயல்கள் 5 (12.ஜூலை.2018)
தயாரிப்பு
தொகுப்பு ரமேஷ் துரை
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் டிவி
முதல் ஒளிபரப்பு 9 சூலை 2018 (2018-07-09)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

மலரின் வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள்தான் இந்தத் தொடரின் முக்கிய கரு.

கதைச்சுருக்கம்

பிரிந்திருக்கும் இரு குடும்பங்களைச் சேர்ந்த இளம் தலைமுறையினரான மலரும் மாறனும் காதல் வலையில் விழுகின்றனர். தங்களது திருமணத்தின் வழியாக இரண்டு குடும்பங்களும் ஒன்று சேரும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், வாழ்கை வேறு திருப்பங்களுடன் காத்துக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு முதல் நாள், மாறன் ஒரு விபத்தில் இறக்கிறான். மேலும், சூழ்நிலை காரணமாக மாறனின் தம்பி வெற்றியை திருமணம் செய்து கொள்கிறார் மலர். வெற்றிதான் மாறனின் இறப்பிற்கு காரணம் என்று எண்ணுகிறார் மலர்.

மலர் தான் தன் குடும்பத்திற்கு சாபம் என்று கருதும் வெற்றியின் தாயார் ஒருபுறம். இந்த மனவலிக்கு இடையே வெற்றியுடன் மலர் சேர்ந்து வாழ்க்கையை வாழ்வாரா என்பதுதான் கதைச் சுருக்கும்.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • பவித்ரா - மலர்
    • மாறனின் முன்னாள் காதலி, தற்பொழுது வெற்றியின் மனைவி.
  • திரவியம் - வெற்றி
    • மாறனின்ன் சகோதரன், அஞ்சலியின் முன்னாள் காதலன், தற்பொழுது மலரின் கணவன்.
  • குமரன் - மாறன்
    • வெற்றியின் சகோதரன் மற்றும் மலரின் காதலன் (தொடரில் இறந்து விடடார்) (பகுதி:1-51)

வெற்றி குடும்பம்

  • வெங்கட் - நடராசன் (மாறன், வெற்றியின் அப்பா)
  • விஜிஷா - அன்புக்கரசி (மாறன், வெற்றியின் அம்மா)
  • ஷியாம் - புகழேந்தி (மாறன், வெற்றியின் தம்பி)
  • நிஷா - ஈஸ்வரி தங்கராசு (வெற்றி மற்றும் மாறனின் சகோதரி, எதிரியானவர்)
  • ஜெமினி மணி - தாங்கரசு (ஈஸ்வரியின் கணவன்)
  • ரம்யா - பவனு (ஈஸ்வரியின் தங்கை)
  • குமரமூர்த்தியை - இதயக்கனி (வெற்றியின் நண்பர்)
  • அக்சரா - செல்வி (வெற்றியின் தங்கை)
  • மதுரை மோகன் - மயிலசாமி (வெற்றியின் தாத்தா)

மலர் குடும்பம்

  • கம்மபாண்டி - ராஜதுரை (மலரின் அப்பா)
  • .... - இந்திராணி ராஜதுரை (மலரின் அம்மா)
  • காயத்ரி புவனேஷ் - அகிலா (மலரின் தங்கை)
  • சித்ரா . மயிலு (மலரின் நண்பி)
  • ஷீலா - தேன்மொழி (தேனு மற்றும் மலரின் தங்கை)

அழகர் குடும்பம்

  • பிரவீன் - அழகர் (எதிரியானவர்)
  • பபிதா - சந்தா (அழகரின் அம்மா)
  • பிரிட்டோ - மருது (அழகரின் நண்பன்)
  • சதிஷ் - பாண்டி (அழகரின் நண்பன்)
  • பூவை சுரேஷ் - பூசாரி

அஞ்சலி குடும்பம்

  • நிவிஷா - அஞ்சலி (வெற்றியின் முன்னாள் காதலி) (எதிரியானவர்)
  • பாரதி மோகன் - அம்பலவனம் (அஞ்சலியின் தந்தை)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.