குக்கு வித் கோமாளி

குக்கு வித் கோமாளி என்பது விஜய் தொலைக்காட்சியில் நவம்பர் 16, 2019 முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் நிஷா தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.[2]

குக்கு வித் கோமாளி
வகை சமையல்
வழங்குநர் ரக்ஷன்
நிஷா
நாடு தமிழ் நாடு
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 16 நவம்பர் 2019 (2019-11-16)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள். ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. இதற்க்கு நடுவில் தலைவர்கள் கொடுக்கப்படும் நேரத்தில் சமைக்க வேண்டும்.[3]

பங்குபெறுபவர்கள்

பிரபலங்கள்

  • ரேகா
    • தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பரவலாக அறியப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.
  • பிரியங்கா ரோபோ சங்கர்
    • பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மனைவி மற்றும் கலக்கப் போவது யாரு? 8 நிகழ்ச்சியி ன் போட்டியாளர்.
  • உமா ரியாஸ்கான்
    • திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.
  • மோகன் வைத்தியா
    • ஒரு கர்நாடக இசைப் பாடகர், செவ்வியல் நடனக் கலைஞர், வயலின் கலைஞர், தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார்.
  • தாடி பாலாஜி
    • தமிழ் திரைப்பட துணை நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர், தொகுப்பாளர் மற்றும் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்.
  • ரம்யா பாண்டியன்
    • தமிழ் திரைப்பட நடிகை.
  • கு. ஞானசம்பந்தன்
    • தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் மற்றும் பட்டிமன்ற நடுவர்.

கோமாளிகள்

  • பிஜிலி ரமேஷ்
  • சாய் சக்தி[4]
  • மணிமேகலை
  • பப்பு
  • டைகர் தங்கதுரை
  • பாலா
  • சிவாங்கி

போட்டிகள்

அத்தியாயம் ஒளிபரப்பான தேதி வெற்றியாளர் நீக்கப்பட்டவர் மதிப்பீடுகள்
01 16 நவம்பர் 2019 (2019-11-16) வனிதா விஜயகுமார் & பிரியங்கா 5.31%
17 நவம்பர் 2019 (2019-11-17)
02 23 நவம்பர் 2019 (2019-11-23) பிரியங்கா 5.6%
24 நவம்பர் 2019 (2019-11-24) 5.1%
03 7 திசம்பர் 2019 (2019-12-07) ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், கு. ஞானசம்பந்தன் மோகன் வைத்தியா 5.32%
8 திசம்பர் 2019 (2019-12-08) 5.44%
04 14 திசம்பர் 2019 (2019-12-14) உமா ரியாஸ்கான்
15 திசம்பர் 2019 (2019-12-15)
05 22 திசம்பர் 2019 (2019-12-22) ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான் கு. ஞானசம்பந்தன்
23 திசம்பர் 2019 (2019-12-23)
06 28 திசம்பர் 2019 (2019-12-28)
29 திசம்பர் 2019 (2019-12-29)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.