தி வோல்

தி வோல் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 12, 2019 முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கேள்வி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1][2][3] இது அமெரிக்க நாட்டில் புகழ் பெற்ற தி வோல் என்ற நிகழ்ச்சியின் தமிழாக்கம் மற்றும் இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகும் முதல் நிகழ்ச்சியும் இதுவாகும்.[4]

தி வோல்
வகை விளையாட்டு நிகழ்ச்சி
வழங்குநர் மா கா பா ஆனந்த்
பிரியங்கா
நாடு தமிழ் நாடு
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 12 அக்டோபர் 2019 (2019-10-12)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியில் உச்சபட்ச பரிசுத் தொகையாக ரூ.2.50 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.[5]

நிகழ்ச்சியின் விவரம்

இந்த நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் மட்டும் பத்தாது. இந்த நிகழ்ச்சியில் வோல் ஒன்று இருக்கும். வோலில் மேலிருந்து கிழாக பல தடங்கல்களைத் தாண்டி பந்து ஒன்று விழும். அந்த பந்து எந்த தொகையில் விழுகிறதோ அந்த தொகை நமக்கு கிடைக்கும். மேலிருந்து விழுகிற பந்துகளில் மூன்று வண்ணங்கள் இருக்கும்.

  • வெள்ளை பந்து - கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை சொன்னால் விழும்.
  • பச்சை பந்து - கூடுதலாக குறிப்பிட்ட தொகையில் விழுந்தால் அந்த தொகை நமக்கு கிடைக்கும்.
  • சிவப்பு பந்து - சில பணத்தொகையை அது எடுத்துக்கொள்ளும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 9 மணி நிகழ்ச்சிகள்
Previous program தி வோல் Next program
பிக் பாஸ் தமிழ் 3 N/A
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.