மா கா பா ஆனந்த்

மா கா பா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார்.

மா கா பா ஆனந்த்
பிறப்புபெப்ரவரி 26, 1986 (1986-02-26)
புதுச்சேரி, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிவானொலி தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2014—நடப்பு
வாழ்க்கைத்
துணை
Suzanne George

நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்குறிப்பு
2014வானவராயன் வல்லவராயன்வல்லவராயன்
2016நவரச திலகம்மூர்த்தி
2016கடலைமாணிக்கம்
2016அட்டிபவா
2017மீசைய முருக்குவானொலி அறிவிப்பாளர்
2017பஞ்சுமிட்டாய்படப்பிடிப்பில்
2017மாணிக்படப்பிடிப்பில்

ஆதாரங்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.