பாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பது விஜய் தொலைக்காட்சி யில் அக்டோபர் 1ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, 24 ஜூன் 2019ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப பின்னையை கொண்ட தொலைக்காட்சி தொடர் ஆகும். அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் இது.[1][2][3] இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன் மற்றும் சரவணன் விக்ரம் போன்ற பலர் நடித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் |
எழுத்து | ப்ரியா தம்பி |
இயக்கம் | சிவசேகர் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | அக்டோபர் 1, 2018 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
கதைச்சுருக்கம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர். தன் கணவரின் தம்பிகளை, தன் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வார். இந்த குடும்பத்தில் மற்ற மருமகளாக வரும் மீனா மற்றும் முல்லையால், இவர்களின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நீடிக்குமா? என்பதுதான் இந்த தொடரின் கதை.
நடிகர்கள்
- ஸ்டாலின் - சத்தியமூர்த்தி
- சுஜிதா - தனலட்சுமி
- வெங்கட் ரங்கநாதன் - ஜீவா
- கவிதா → ஹேமா ராஜ்குமார் - மீனா
- சித்ரா - முல்லை
- குமரன் தங்கராஜன் - கதிர்
- சரவணன் விக்ரம் - கண்ணன்
- சாந்தி வில்லியம்ஸ் - "பிள்ளையார் பட்டி" பார்வதி
- சுமங்கலி - (தனலட்சுமி அம்மா)
- டேவிட் சாலமன் - ராஜா
- ஷீலா - லட்சுமி (சத்தியமூர்த்தி, கதீர், ஜீவா மற்றும் கண்ணனின் தாய்)
- கும்பம் மீனா - செல்லமுத்து
- --- - ஜனார்தன்
- விவேயா விஜய் - ஸ்வேதா (மீனாவின் சகோதரி)
- ஸ்ரீ வித்யா ஷங்கர் -
நேர அட்டவணை
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாங்கள் |
---|---|---|---|
1 அக்டோபர் 2018 - 21 ஜூன் 2019 | 22:00 | 1-188 | |
24 ஜூன் 2019 - | 20:00 | 189-ஒளிபரப்பில் | |
வேறு மொழிகளில் மறுதயாரிப்பு
மொழி | தலைப்பு | தொலைக்காட்சி | ஒளிபரப்பப்பட்டது | அத்யாயங்கள் |
---|---|---|---|---|
தெலுங்கு | வத்தினம்மா | மா தொலைக்காட்சி | 6 மே 2019 | ஒளிபரப்பில் |
கன்னடம் | வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ் | ஸ்டார் சுவர்ணா | 17 ஜூன் 2019 | ஒளிபரப்பில் |
மேற்கோள்கள்
- "Upcoming New Vijay TV Serial "Pandiyan Stores"".
- "ஆனந்தம் பாணியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடர்." (ta). cinema.dinamalar.com.
- "New TV serial 'Pandian Stores' to premiere soon". timesofindia.indiatimes.com.
வெளி இணைப்புகள்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 8 மணிக்கு | ||
---|---|---|
Previous program | பாண்டியன் ஸ்டோர்ஸ் 24 ஜூன் 2019 – ஒளிபரப்பில் |
Next program |
பொண்ணுக்கு தங்க மனசு 20 ஆகஸ்ட் 2018 – 22 ஜூன் 2019 |
- |