தேன்மொழி பி.ஏ

தேன்மொழி பி.ஏ - ஊராட்சி மன்றத் தலைவர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 26 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு நீல குயில் என்ற தொடருக்கு பதிலாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடர் நிம்கி முகியா என்கிற இந்தி தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடரில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அறிமுகமான ஜாக்குலின் முதல் முதலாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக சித்தார்த் அருள் என்ற காதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இத் தொடரை கதிரவன் இயக்கியுள்ளார்.[2][3]

தேன்மொழி பி.ஏ
வகை நகைச்சுவை
குடும்பம்
அரசியல்
நாடகம்
இயக்கம் கதிரவன்
நடிப்பு
  • ஜாக்குலின்
  • சித்தார்த்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 26 ஆகத்து 2019 (2019-08-26)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

இந்த தொடரில் வீட்டில் செல்ல மகளாக, சுதந்திரமாக வளரும் தேன்மொழி, இவர் ஊராட்சி மன்றத் தலைவராக ஆவதும், இதனால் அந்த ஊரை சேர்ந்த பெரிய மனிதர் இவரை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதை வைத்து மருமகளை கொடுமை படுத்த நினைக்கிறார் மாமியார், ஆனால் அவருக்கு சிரித்தவாரே செம மொக்கை கொடுக்கிறார். அதன் பிறகு நடக்கும் அமளி துமளிதான் கதை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி மதியம் 3 மணிக்கு
Previous program தேன்மொழி பி.ஏ
(26 ஆகத்து 2019 - ஒளிபரப்பில்)
Next program
நீல குயில்
(17 திசம்பர் 2018 – 24 ஆகத்து 2019)
-
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.