நீல குயில் (தொலைக்காட்சித் தொடர்)

நீல குயில் என்பது விஜய் தொலைக்காட்சி யில் திசம்பர் 17, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பான ஒரு பழகுக்குடி இனத்தின் பெண்ணின் வாழ்கை கதையை சொல்லும் தொலைக்காட்சி தொடர்.[1]. இந்த தொடர் வங்காளி மொழி தொடரான 'இஷ்தி குதும்' எனும் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.[2]

நீல குயில்
வகை குடும்பம்
நாடகம்
இயக்கம் பிஜு விர்ஜிஸ் (1-103)
சி.ஜே. பாஸ்கர் (104-211)
திரைக்கதை அசோக் குமார்
நடிப்பு
  • சத்தியா
  • ஸ்நிஷா சந்திரன்
  • சந்தனா செட்டி
முகப்பிசைஞர் ராஜிவ் அட்டுகல்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
இயல்கள் 211
தயாரிப்பு
தயாரிப்பு தக்கோலம் தணிகாசலம்
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஒளிப்பதிவு ரமேஷ் குமார்
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ரோஸ் பெட்டல்ஸ் என்டேர்டைமென்ட்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 17 திசம்பர் 2018 (2018-12-17)
இறுதி ஒளிபரப்பு 24 ஆகத்து 2019 (2019-08-24)
காலவரிசை
தொடர்பு நீலக்குயில் (மலையாளம்)
இஷ்தி குதும் (பெங்காலி)
மோகி (இந்தி)

இந்தத் தொடரில் ஜெய் சூர்யாவாக புதுமுக நடிகர் சத்யா நடிக்கிறார். ஸ்நிஷா இந்தத் தொடரில் கதாநாயகி சிட்டுவாக நடிக்க. ராணியாக நடிகை சந்தனா நடித்துள்ளார். இந்த தொடர் இவர்களின் முதல் தமிழ் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயக்குமார் இயக்கும் இத் தொடருக்கு ராஜிவ் அட்டுகல் இசையமைக்கிறார். இந்த தொடர் 24 ஆகத்து 2019 அன்று 211 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்

பழங்குடியினரின் ஊரைப் பற்றி தெரிந்து கொள்ள வரும் ஜெய்சூர்யாவை சிட்டு என்னும் பழங்குடி கிராமத்து பெண் சூழ்நிலை காரணமாக கட்டாயத் திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. ஜெய் சூர்யா, ராணி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டவர். அந்த கிராமத்தினர் ஜெய் சூர்யாவுடன் சிட்டுவை அனுப்பி வைக்கின்றனர்.

ஜெய் சூர்யா, சிட்டுவுடன் திருமணம் ஆனதை குடும்பத்தினரிடம் மறைத்து விடுகிறார். அந்த வீட்டிலேயே சிட்டுவும் வேலைக்காரியாகத் தங்கி விடுகிறார். சிட்டு, தனக்கும், ஜெய்யுக்கும் திருமணம் ஆனதை குடும்பத்தினரிடம் எப்படி தெரிவிப்பார், ராணிக்கு ஜெய் சூர்யாவுக்கும் திருமணம் நடக் குமா? இல்லை சிட்டு, ஜெய் சூர்யாவின் காதலை வெல்வாரா என்பது தான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • சத்தியா - ஜெய் சூர்யா
  • ஸ்நிஷா சந்திரன் - சிட்டு ஜெய் சூர்யா
  • சந்தனா செட்டி - ராணி

சூர்யா குடும்பத்தினர்

  • சபிதா நாயர் - கல்யாணி (சூர்யாவின் அம்மா)
  • --- - பாலா முருகன் (சூர்யாவின் தந்தை)
  • சத்தீஸ் --- (சூர்யாவின் மாமா)
  • --- - சந்திரா (சூர்யாவின் அத்தை)
  • வசந்த கோபிநாத் - சரவணன்
  • --- - ஜெயந்தி

சிட்டு குடும்பத்தினர்

  • சேரு - தெய்வானை (சிட்டுவின் அம்மா)
  • பி. ஆர். வரலட்சுமி - (சிட்டுவின் பாட்டி)
  • --- - மாத்வான்/மாசி (சித்துவின் வளர்ப்பு தந்தை, ஒரு கொள்ளைக்காரர்)

ராணி குடும்பத்தினர்

  • --- - சரத் சந்திரன் (ராணியின் தந்தை)
  • ரஷ்மி ஹரிபிரசாத் - ராதாமணி (ராணியின் தாயார்)
  • --- - கமலா (ராணியின் அத்தை)

நடிகர்களின் தேர்வு

இது ஒரு குடும்ப கதை களம் கொண்ட தொடர், இந்தத் தொடரில் ஜெய் சூர்யாவாக சத்யா நடிக்கிறார். இவர் முதல் முறையாக தமிழ் தொலைக்காட்சியில் நடிக்கும் தொடர் இதுவாகும். மலையாள பதிப்பில் நடிக்கும் ஸ்நிஷா இந்தத் தொடரில் கதாநாயகி சிட்டு வாகவே நடித்துள்ளார். ராணியாக நடிகை சந்தனா நடிக்கிறார். இவர் தெலுங்கு தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானவர். இவருக்கும் இது முதல் தமிழ் தொடர்.

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி பிற்பகல் 3 மணிக்கு
Previous program நீல குயில்
(17 திசம்பர் 2018 – 24 ஆகத்து 2019)
Next program
- தேன்மொழி பி.ஏ
(26 ஆகத்து 2019 - ஒளிபரப்பில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.