சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (தொலைக்காட்சித் தொடர்)

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்பது விஜய் தொலைக்காட்சியில் 22 சூலை 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு அஞ்சலி என்ற தொடருக்கு பதிலாக ஒளிபரப்பாகும் குடும்பம் காதல் மற்றும் அரசியல் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடரை அப்துல் கபீஸ் என்பவர் இயக்க வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.[2][3][4]

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
வகை குடும்பம்
அரசியல்
காதல்
நாடகம்
இயக்கம் அப்துல் கபீஸ்
நடிப்பு
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 22 சூலை 2019 (2019-07-22)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

கதைச்சுருக்கம்

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தமிழரசி தனது தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் தாத்தாவின் அரவணைப்பில் வளர்த்து வருகின்றாள். இவள் ஒரு பள்ளி ஆசிரியரும் ஆவார். இவளுக்கும் அவளது தங்கைகளுக்கு அவர்களின் அப்பா எப்படி இறந்தார் என்ற விடயம் தெரியாமல் வளர்த்து வருகின்றனர்.

பணக்கார குடும்பத்தை சேர்த்த வேல்முருகன் சிறுவயதிலிருந்து பெற்றோரை இழந்த இவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்த்து வருகின்றான். யார் சொல்லையும் கேட்காத இவன் பாட்டியின் சொல்லுக்கு மட்டும் அடிபணிவான். முதல் சந்திப்பிலிருந்து எலியும் பூனையுமான வேல்முருகனுக்கும் தமிழரசிக்கும் திருமணம் செய்து வைக்க நினைக்கும் பாட்டி விஜயலக்ஷ்மி. இருவருக்கும் அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் என்றே தெரியாமல் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர பழைய பகை மீண்டும் வருகின்றதா? அல்லது காலமாற்றத்தில் எல்லாம் மாறியுள்ளதா என்பது தான் கதை.

நடிகர்கள்

  • வினோத் பாபு - வேல்முருகன்
  • தேஜஸ்வினி - தமிழரசி
  • லதா - விஜயலக்ஷ்மி
  • சுபலட்சுமி - திவ்யா
  • அஸ்வந்த் திலக் - சரணவனன்
  • ஜீவிதா
  • சஹானா செட்டி[5] - நிஷா
  • சீதா அணில் - சித்ரா
  • பிரியங்கா - எழில்
  • தீபிகா - கலை
  • ஜெயலட்சுமி - ஊர்வசி
  • ஈஸ்டர்
  • நேசன் - தென்னரசு
  • பிரவீன்

நடிகர்களின் தேர்வு

இந்த தொடரில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு கொன்ற வினோத் பாபு என்பவர் வேல்முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சிவகாமி என்ற தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு தொலைக்காட்சி நடிகை தேஜஸ்வினி என்பவர் தமிழரசி என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் தொலைக்காட்சித்துறைக்கு அறிமுகமாகிறார். நடிகை லதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் அஸ்வந்த் திலக், சுபலட்சுமி, சஹானா செட்டி, தீபிகா போன்ற பலர் நடிக்கிறார்கள்.

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி மதியம் 1 மணி தொடர்கள்
Previous program சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
(22 சூலை 2019 - ஒளிபரப்பில்)
Next program
அஞ்சலி
(25 பிப்ரவரி 2019 – 20 சூலை 2019)
-
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.