வினோத் பாபு

வினோத் பாபு (சூன் 11, 1990) என்பவர் தமிழ்த் தொகுப்பாளர்கள், நகைச்சுவையாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.

வினோத் பாபு
பிறப்புசூன் 11, 1990 (1990-06-11)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிதொகுப்பாளர்கள், நகைச்சுவையாளர், தொலைக்காட்சி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2014-தற்போது வரை

ஆரம்பகால வாழ்க்கை

வினோத் பாபு ஜூன் 11 1990 ஆம் அன்று தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். திருச்சிராப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்து ஸ்ரீவில்லிபுட்டூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

தொலைக்காட்சி வாழ்க்கை

இவர் 2014ஆம் ஆண்டு ஆதித்யா தொலைக்காட்சியில் கோலிவுட் சம்பிரதாயம் என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து காமெடிக்கு நாங்க கரண்டி என்ற நிகழ்ச்சியையும் அதே தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார்.

2018ஆம் ஆண்டில் சிவகாமி என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஜாதி மாறி திருமணம் செய்யும் இரு இளம் ஜோடிகள் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை மையமாக எடுக்கப்பட்ட தொடரில் ராஜ்குமார் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக நீனு கார்த்திகா நடித்துள்ளார். இந்த தொடர் இவருக்கு ஒரு நல்ல பெயரை கொடுத்தது. இந்த தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு? (பகுதி 8) என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொண்டார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்[1][2] என்ற தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2014-2016கோலிவுட் சம்பிரதாயம்தொகுப்பாளராகஆதித்யா தொலைக்காட்சி
காமெடிக்கு நாங்க கரண்டி
2018சிவகாமிராஜ்குமார்கலர்ஸ் தமிழ்
2019கலக்கப் போவது யாரு? (பகுதி 8)போட்டியாளராகவிஜய் தொலைக்காட்சி
2019–ஒளிபரப்பில்சுந்தரி நீயும் சுந்தரன் நானும்வேலு
2019எங்கிட்ட மோததே 2விருந்தினராக
ஸ்டார்ட் மியூசிக்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.