அஞ்சலி (தொலைக்காட்சித் தொடர்)

அஞ்சலி என்பது விஜய் தொலைக்காட்சியில் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பான ஒளிபரப்பாகும் குடும்ப பிண்ணனியை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் கல்யாணமாம் கல்யாணம் என்ற தொடரின் 2ஆம் பாகம், முதலாம் பாகத்தை இயக்கிய இயக்குனர் பிரம்மா இத் தொடரையும் இயக்கியுள்ளார்.[1]

அஞ்சலி
வகை குடும்பம்
நாடகம்
இயக்கம் பிரம்மா
திரைக்கதை இராமணமூர்த்தி
நடிப்பு
  • அதித்ரி
  • பிராக்யா நாகரா
  • சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன்
  • அஸ்வின்
முகப்பிசைஞர் அசோகன்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் 2
இயல்கள் 124
தயாரிப்பு
தயாரிப்பு இராமணமூர்த்தி
தொகுப்பு எஸ். குமார்
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஒளிப்பதிவு கலைவாணன்
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 25 பெப்ரவரி 2019 (2019-02-25)
இறுதி ஒளிபரப்பு 20 சூலை 2019 (2019-07-20)

நந்தினி தொடர் புகழ் அதித்ரி இந்த தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவரின் இரட்டை சகோதரனாக அஸ்வின் நடிக்க, புதுமுக நடிகை பிராக்யா நாகரா கமலி என்ற கதாபாத்திரத்திலும் தெய்வமகள் தொடரில் நடித்த சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன் சூர்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். இந்த தொடர் காது மற்றும் வாய் பேச முடியாத அஞ்சலி என்ற சிறுமியை பற்றிய தொடர் ஆகும்.

கதைச்சுருக்கம்

கமலி மற்றும் சூர்யாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கின்றது. மகன் கார்த்திக் மற்றும் மகள் அஞ்சலி, அஞ்சலி பிறக்கும் பொது காது மற்றும் வாய் பேச முடியாதவள் அதனால் காமலிக்கு தெரியாமல் சூர்யா அஞ்சலியை குறைபாடுகள் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து தனியாக வளர்த்து வருகின்றார். சூர்யா எதற்காக அஞ்சலியை தனியாக வளர்த்து வருகின்றான், தனக்கு இன்னொரு குழந்தை இருப்பது தெரிய வந்தாள் கமலி என்ன செய்யபோகிண்டாள் போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்லும் கதையாய் இந்த தொடர் அமைந்துள்ளது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • அதித்ரி - அஞ்சலி
  • பிராக்யா நாகரா - கமலி சூர்யா
  • சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன் - சூர்யா
  • அஸ்வின் - கார்த்திக்

துணைக் கதாபாத்திரம்

  • ஜீவிதா - நிர்மலா ஜெகதீஷ்
  • வைசாலி
  • உமா ராணி - பவானி
  • கோகுல் மேனன் - மதன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி மதியம் 1 மணிக்கு
Previous program அஞ்சலி
(25 பிப்ரவரி 2019 – 20 சூலை 2019)
Next program
கல்யாணமாம் கல்யாணம்
(18 ஜூன் 2018 – 23 பெப்ரவரி 2019)
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
(22 சூலை 2019 - ஒளிபரப்பில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.