பொண்ணுக்கு தங்க மனசு (தொலைக்காட்சித் தொடர்)
பொண்ணுக்கு தங்க மனசு ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, 24 ஜூன் 2019ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும்.
பொண்ணுக்கு தங்க மனசு | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் |
எழுத்து | பிரதீப் மணிகார் |
இயக்கம் | ஹாரிசன் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ் நாடு |
ஒளிப்பதிவு | மார்ட்டின் ஜோ |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
ரிஸன் பிக்சர்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் டிவி |
முதல் ஒளிபரப்பு | 20 ஆகத்து 2018 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
காலவரிசை | |
தொடர்பு | ஸ்திரீதனம் |
இத்தொடர் மலையாள மொழியில் பெரும் வெற்றி பெற்ற ‘ஸ்திரீதனம்’ எனும் தொடரை தழுவி எடுக்கப்படுகிறது. முதலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்தார், தற்பொழுது அவருக்கு பதிலாக விந்துஜா விக்ரமன் திவ்யாவாக நடிக்கிறார். அழகு தொடரில் நடித்த நடிகர் அஸ்வின், பிரசாந்தாக நடிக்கிறார். இத்தொடரின் முக்கிய கதாபாத்திரமான சேதுலட்சுமியாக நடிகை சிரிஷா (முன்னர்) சித்ரா ஷெனோ (தற்பொழுது) நடிக்கிறார்கள்.[1]
இந்த தொடர் பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் நடுத்தர குடுப்பத்தை சேர்ந்த திவ்யாவின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் தொடர். ஹாரிசன் இயக்கும் இத்தொடருக்கு மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார்.
கதைச்சுருக்கம்
நடுத்தர குடுப்பத்தை சேர்ந்த திவ்யா எனும் பெண், பிரசாந்த் என்ற பணக்கார வீட்டு பையனை விரும்புகிறாள். அந்த பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் சொல்லுகிறாள்.
பணம்தான் வாழ்க்கை என்று வாழ்பவர் பிரசாந்தின் தாயான சேதுலட்சுமி, தன் மகனை ஒரு பணக்கார பெண்ணுக்குதான் கட்டித் தரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். அதனால் திவ்யா போன்ற நடுத்தர வீட்டு பெண் மற்றும் அவள் மூலமாக வரும் வரதட்சணையில் அவருக்கு திருப்தி இல்லை. அந்த பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் திவ்யாவின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் தொடர்.[2]
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ராதிகா (பகுதி:1-102) → விந்துஜா விக்ரமன் (பகுதி:107-) - திவ்யா
- அஸ்வின் - பிரசாந்த்
- சிரிஷா (பகுதி:1-62) → சித்ரா ஷெனோ (பகுதி:63) - சேதுலட்சுமி லட்சுமணன் (எதிர்மறை கதாபாத்திரம்)
திவ்யா குடும்பம்
- கே.எஸ். ஜி. வெங்கடேஷ் - ராமநாதன் (திவ்யாவின் தந்தை)
- ரஜினி முரளி - மஞ்சுளா ராமநாதன் (திவ்யாவின் அம்மா)
- வினீஜா விஜய் - வித்யா (திவ்யாவின் இளைய சகோதரி)
பிரசாந்த் குடும்பம்
- --- - லட்சுமணன் (சேதுலட்சுமியின் கணவன் மற்றும் பிரசாந்த் தந்தையார்)
- தேவி சந்தனா - சரதா லக்ஷ்மன் (லக்ஷ்மணனின்2 வது மனைவி)
- --- - கார்த்திகா (லட்சுமணனின் மகள்)
- விகாஷ் சம்பத் - கார்த்திக் லட்சுமணன் (சேதுவின் மூன்றாவது மகன்)
- நியாஸ் கான் - வசந்த லட்சுமணன் (சேதுவின் இரண்டாவது மகன்)
- தேஜஸ்வினி சேகர் - வேணி வசந்த் (வசந்தின் மனைவி) (எதிர்மறை கதாபாத்திரம்)
- சுஜா வாஸன் - சுபா (சேதுலட்சுமியின் மகள்)
வேணியின் குடும்பம்
- கோட்டயம் ரஷீத் - சுகுமாரன் (வேணியின் தந்தையார்)
- யுவராணி → சாயா சிங் - சாந்தி (வேணியின் தாய்)
துணை கதாபாத்திரங்கள்
- மகாலட்சுமி - மயூரி
- பிரதீபா முத்து -
- மது மோகன் -
நேர அட்டவணை
இந்த தொடர் 20 ஆகத்து 2018ஆம் ஆண்டு முதல் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடருக்கு பதிலாக இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடருக்காக இந்த தொடர் ஜூன் 24ஆம் திகதி 2019ஆம் ஆண்டு முதல் மதியம் 1:30 மணிக்கு மாற்றப்பட்டது. 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பான இந்த தொடர் தற்பொழுது 6 நாட்களுக்கு ஒளிபரப்பாகின்றது .
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாங்கள் |
---|---|---|---|
20 ஆகஸ்ட் 2018 - 22 ஜூன் 2019 | 20:00 | 1-220 | |
24 ஜூன் 2019 - | 13:30 | 221-ஒளிபரப்பில் | |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மதியம் 1:30 மணிக்கு | ||
---|---|---|
Previous program | பொண்ணுக்கு தங்க மனசு 24 ஜூன் 2019 – ஒளிபரப்பில் |
Next program |
அவளும் நானும் (26 பெப்ரவரி 2018 – 22 சூன் 2019) |
- |
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 8 மணிக்கு | ||
---|---|---|
Previous program | பொண்ணுக்கு தங்க மனசு 20 ஆகஸ்ட் 2018 – 22 ஜூன் 2019 |
Next program |
நெஞ்சம் மறப்பதில்லை (9 அக்டோபர் 2017 - 17 ஆகஸ்ட் 2018) |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 24 ஜூன் 2019 – ஒளிபரப்பில் |