நெஞ்சம் மறப்பதில்லை (தொலைக்காட்சித் தொடர்)

நெஞ்சம் மறப்பதில்லை விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ம் தேதி 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 20ம் தேதி 2018 முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு காதல் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான குசும் தோலா எனும் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.

நெஞ்சம் மறப்பதில்லை
வகை காதல்
குடும்பம்
நாடகம்
இயக்கம் அப்துல் ஹபீஸ்
நடிப்பு
முகப்பிசைஞர் இளையவன்
முகப்பிசை இளையவன்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் 1
இயல்கள் 358
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 9 அக்டோபர் 2017 (2017-10-09)
இறுதி ஒளிபரப்பு 22 பெப்ரவரி 2019 (2019-02-22)

இந்த தொடரில் சரண்யா டுராடி சுந்தர்ராஜ், அமித் பார்கவ் மற்றும் சௌமியா ஆகியோர் நடிக்க, அப்துல் ஹபீஸ் இந்தத் தொடரை இயக்க இளையவன் இசை அமைக்கிறார்.[1][2][3][4] இந்த தொடர் பிப்ரவரி 22, 2019 அன்று 358 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது.

கதை சுருக்கம்

இந்தத் தொடர் விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் முக்கோணக் காதல் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • சரண்யா டுராடி சுந்தர்ராஜ்- சரண்யா
    • காவல் அதிகாரியான வேல்ராஜின் மகள், சர்ந்தர்ப்ப சூழ்நிலையால் தந்தையின் மரணத்திற்கு பிறகு விக்ரமை திருமணம் செய்கிறார்.
  • அமித் பார்கவ் - விக்ரம்[5][6]
    • கூட்டு குடும்ப பிண்ணனியை கொண்ட ஒரு காவல் அதிகாரி, சத்யாவின் முன்னாள் காதலன், சர்ந்தர்ப்ப சூழ்நிலையால் சரண்யாவை திருமணம் செய்கின்றான்.
  • நிஷா (பகுதி:1-120) → சௌமியா - சத்யா
    • விக்ரமின் முன்னாள் காதலி, தற்பொழுது அர்ஜுனின் மனைவி. தனக்கு விக்ரம் துரோகம் செய்து விட்டான் என நினைத்து அவனையும் சரண்யாவையும் பிரிக்க நினைக்கிறாள்.
  • அஸ்வந்த் திலக் - அர்ஜுன்
    • விக்கிரமின் உறவினர், ஆர்மியில் பணிபுரிகிறார் மற்றும் சத்யாவின் கணவன்.

துணை கதாபாத்திரம்

  • ஸ்ரீ துர்கா - பிரியா
  • அனுராதா - அகிலாண்டேஸ்வரி
  • ராஜா - வேல்ராஜ் (தொடரில் இறந்து விட்டார்)
  • எல். லலிதா - ஜெயா
  • குமரேசன்
  • தரணி - ஸ்ரீதேவி
  • பபிதா -
  • பிரவீன் - திலீபன்
  • முரளி குமார் - பாலச்சந்திரன்
  • கே. எல் மணி - அருண்

சிறப்பு தோற்றம்

  • அபிநயஸ்ரீ
  • ராமர்
  • ராதிகா ராவ்

நடிகர்கள் தேர்வு

கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்து புகழ் பெற்ற அமித் பார்கவ் தான் இந்தக் கதையில் விக்ரமாக நடிக்கிறார். ‘புதிய தலைமுறை’ டிவியில் செய்தி வாசிப்பாளர் ஆக இருந்த சரண்யா டுராடி சுந்தர்ராஜ் இந்தத் தொடரின் மூலம் டிவி தொடர் நாயகியாக அடியெடுத்து வைத்தார். பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நிஷா, சத்யாவாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தார். பகுதி 121 முதல் வள்ளி தொடரில் நடித்த சௌமியா நிஷாவுக்கு பதிலாக நடிக்கின்றார். இவர்களோடு ஸ்ரீ துர்கா, அஸ்வந்த் திலக், அனுராதா, எல். லலிதாபோன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இலக்கு அளவீட்டு புள்ளி

இந்த தொடர் ஆரம்பத்தில் சராசரியாக 5.2% இலக்கு அளவீட்டு புள்ளி பெற்றது. இதன் கடைசி வார பகுதியில் தமிழ் நாடு அளவில் 4.4% இலக்கு அளவீட்டு புள்ளி பெற்று சிறந்த 20 தொடர்களுக்குள் இந்த தொடர் அடங்கும்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் கதாபாத்திரம் முடிவு
2018 கலாட்டா நட்சத்திரா விருதுகள் சிறந்த நடிகர் அமித் பார்கவ் விக்ரம் பரிந்துரை
சிறந்த ஜோடி அமித் பார்கவ் & சரண்யா டுராடி சுந்தர்ராஜ் விக்ரம் & சரண்யா பரிந்துரை
4வது விஜய் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகை சரண்யா டுராடி சுந்தர்ராஜ் சரண்யா பரிந்துரை
சிறந்த நடிகர் அமித் பார்கவ் விக்ரம் பரிந்துரை
சிறந்த ஜோடி அமித் பார்கவ் & சரண்யா டுராடி சுந்தர்ராஜ் விக்ரம் & சரண்யா பரிந்துரை
சிறந்த துணை நடிகை ஆஷா ராணி பரிந்துரை
சிறந்த துணை நடிகர் முரளி குமார் பாலச்சந்திரன் பரிந்துரை
சிறந்த டூப் ஆர். எஸ் சரவணன் பரிந்துரை
சிறந்த தொடர் நெஞ்சம் மறப்பதில்லை பரிந்துரை
சிறந்த கிரேவ் ஃபிக்ஷன் நெஞ்சம் மறப்பதில்லை பரிந்துரை
சிறந்த புதுமுகம் சரண்யா டுராடி சுந்தர்ராஜ் சரண்யா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த அப்பா ராஜா வேல்ராஜ் பரிந்துரை
சிறந்த எதிர்மறை கதாபாத்திரம் அனுராதா அகிலாண்டேஸ்வரி பரிந்துரை
சிறந்த அம்மா சுமதி ஸ்ரீ பரிந்துரை
விருப்பமான மாமியார் எல். லலிதா ஜெயா பரிந்துரை
சிறந்த இயக்குனர் பரிந்துரை

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 8:30 மணிக்கு
Previous program நெஞ்சம் மறப்பதில்லை
(20 ஆகஸ்ட் 2018 - 22 பிப்ரவரி 2019)
Next program
சரவணன் மீனாட்சி (பகுதி 3)
(18 ஜூலை 2016 - 17 ஆகஸ்ட் 2018)
பாரதி கண்ணம்மா
25 பிப்ரவரி 2019 – ஒளிபரப்பில்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 8 மணிக்கு
Previous program நெஞ்சம் மறப்பதில்லை
(9 அக்டோபர் 2017 - 17 ஆகஸ்ட் 2018)
Next program
மாப்பிள்ளை
14 நவம்பர் 2016 - 6 அக்டோபர் 2017
பொண்ணுக்கு தங்க மனசு
20 ஆகஸ்ட் 2018 – ஒளிபரப்பில்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.