அமித் பார்கவ்

அமித் பார்கவ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். தமிழ், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஒளிபரப்பான சீதை தொலைக்காட்சித் தொடரில் ஏற்ற இராமர் வேடத்தின் வாயிலாக புகழ்பெற்றார்.[1] அபிசேக் வர்மன் இயக்கிய2 ஸ்டேட்ஸ் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சித் தொடரில் அர்ஜுன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். தமிழில், என்னை அறிந்தால் (2015), மிருதன் (2016) உள்ளிட்ட திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னட மொழித் திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் பணியாற்றியுள்ளார்.

அமித் பார்கவ்
பிறப்புபெங்களூர், கருநாடகம், இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், தொலைக்காட்சி நடிகர், பின்னணிக் குரல் கொடுப்பவர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2014- தற்போது வரை

வாழ்க்கைக் குறிப்பு

திரைப்பட விபரம்

தொலைக்காட்சித் தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் மொழி தொலைக்காட்சி குறிப்புகள்
2010 சீதைஇராமர்கன்னடம்உதயா தொலைக்காட்சி
2013மகாபாரதம்கண்ணன்தமிழ்சன் தொலைக்காட்சி
2014பிக் பாஸ் கன்னடம் 2குரல் மட்டும்கன்னடம்ஏசியாநெட் சுவர்ணா
2014–2017கல்யாணம் முதல் காதல் வரைஅர்ச்சுன்தமிழ்ஸ்டார் விஜய்
2017 மாப்பிள்ளை தீபக் தமிழ் விஜய்
2017- தற்போது நெஞ்சம் மறப்பதில்லை விக்ரம் தமிழ் விஜய்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2014விழி மூடி யோசித்தால்தமிழ்
20142 ஸ்டேட்ஸ்கரீசுஇந்தி
2014என்னமோ ஏதோமருத்துவர் ஆனந்த்தமிழ்
2015என்னை அறிந்தால்தமிழ்
2016மிருதன்நவீன்தமிழ்
2017குற்றம் 23அரவிந்த்தமிழ்
2018கர்ஜனைதமிழ்படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

  1. "Act of faith". தி இந்து (12 February 2013). பார்த்த நாள் 29 October 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.