பாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)
பாரதி கண்ணம்மா என்பது விஜய் தொலைக்காட்சியில் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல், பாசம், குடும்பம் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் மலையாளம் மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் தமிழ் மறு தயாரிப்பாகும்.[1][2]
பாரதி கண்ணம்மா | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் காதல் நாடகம் |
இயக்கம் | பிரவீன் பென்னெட் |
நடிப்பு |
|
முகப்பிசைஞர் | இளையவன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 25 பெப்ரவரி 2019 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
காலவரிசை | |
தொடர்பு | கருத்தமுத்து (மலையாளம்) கார்த்திகை தீபம் (தெலுங்கு) முத்துலட்சுமி (கன்னடம்) |
இந்த தொடரில் பாரதியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். இவருக்கு ஜோடிகளாக புதுமுக நடிகை ரோஷினி ஹரிப்ரியன் கண்ணமாகவும் மற்றும் அஞ்சலியாக சுவீட்டி நடிக்கிறார்.
கதைச்சுருக்கம்
கண்ணம்மாவும் மற்றும் அஞ்சலி இருவரும் மாற்றாந்தாய் சகோதரிகள். கண்ணம்மா கருத்த நிறம் கொண்டவள் அஞ்சலி வெள்ளை நிறம் கொண்டவள்.
கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற ஒரு மாப்பிள்ளை அமைகிறது. அதன் பின் அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது இவர்களின் வாழ்வில் அஞ்சலியால் வரவிருக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த கதை நகர்கின்றது.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- அருண் பிரசாத் - பாரதி
- நல்ல உள்ளம் கொண்டவன் இவனுக்கு அழகை விட பாசம் தான் பெரியது என நினைப்பவன். கண்ணம்மாவின் கணவன்.
- ரோஷினி ஹரிப்ரியன் - கண்ணம்மா பாரதி
- தீப்தி ஸ்ரீ - கண்ணம்மா
- பாரதியின் மனைவி. அனைவருக்கும் உதவும் நல்ல குணம் கொண்டவள். சற்று கருத்த நிறம் உள்ளவள் என்பதால் சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறாள்.
- தீப்தி ஸ்ரீ - கண்ணம்மா
- சுவீட்டி - அஞ்சலி
- வெள்ளை நிறம் உடையவள், கண்ணம்மாவின் மாற்றான் தாய் சகோதரி. புறத்தோற்றம் தான் ஒரு பெண்ணுக்கு அழகு என்ற எண்ணம் கொண்டவள்.
- அகிலன் - அகிலன்
பாரதி குடும்பத்தினர்
- ரூபா ஸ்ரீ - சௌந்தர்யா
- அகிலன் மற்றும் பாரதியின் தாய், தனக்கு ஒரு அழகனா மருமகள் தான் வேண்டும் என்று நினைப்பவர்.
- ரிஷி -
- அகிலன் மற்றும் பாரதியின் தந்தை.
கண்ணம்மா குடும்பத்தினர்
- வெங்கட் - சண்முகம்
- கண்ணம்மா மற்றும் அஞ்சலியின் தந்தை.
- செந்தில்குமரி - பாக்யலட்சுமி
- அஞ்சலியின் தாய், கண்ணம்மாவின் மாற்றான் தாய்.
துணை கதாபாத்திரங்கள்
- ராஜ்குமார் மனோகரன்
- உமா ராணி - செண்பகவாலி
சிறப்பு தோற்றம்
- சினேகன் (அத்தியாயம்: 1)
- தீபா சங்கர் -
- கண்ணம்மாவின் தாய் (அத்தியாயம்: 1)
- சாந்தி மணி (அத்தியாயம்: 3)
மேற்கோள்கள்
- "விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ புதிய தொடர்" (ta). 4tamilcinema.com.
- "பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடர்" (ta). cinema.dinamalar.com.
வெளி இணைப்புகள்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 8:30 மணிக்கு | ||
---|---|---|
Previous program | பாரதி கண்ணம்மா 25 பிப்ரவரி 2019 –ஒளிபரப்பில் |
Next program |
நெஞ்சம் மறப்பதில்லை (20 ஆகஸ்ட் 2018 - 22 பிப்ரவரி 2019) |
- |