விஜய் தொலைக்காட்சி

ஸ்டார் விஜய் (பொதுவாக விஜய் தொலைக்காட்சி என அழைக்கப்படும்) என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இது இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 1994
வலையமைப்பு ஸ்டார் தொலைக்காட்சி குழுமம்
உரிமையாளர் ஸ்டார் இந்தியா
பட வடிவம் 576i மற்றும் 1080i
நாடு  இந்தியா
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், ஜப்பான், கனடா, ஃகொங்கொங் and அமெரிக்க ஐக்கிய நாடு
துணை அலைவரிசை(கள்) ஸ்டார் அனந்தா
ஸ்டார் பிளஸ்
வலைத்தளம் Official Site
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) சானல் 758
Big TV (இந்தியா) சானல் 803
டிஷ் டிவி (இந்தியா) சானல் 914
சன் டைரக்ட் (இந்தியா) சானல் 124
டாட்டா ஸ்கை (இந்தியா) சானல் 807
டயலாக் டிவி
(இலங்கை)
சானல் 52
டயரக்டிவி (அமெரிக்க ஐக்கிய நாடு) சானல் 2004
வியட்பவோ சியேடிவி (வியட்நாம்) சானல் 37
மின் இணைப்பான்
றொகெர்சு கேபிள் (கனடா) சானல் 864
ஸ்டார்ஹப் டிவி (சிங்கப்பூர்) சானல் 135
IPTV
னவ் டிவி
(ஃகொங்கொங்)
சானல் 798
வேர்ல்ட் ஆன் டிமாண்ட் (ஜப்பான்) சானல் 731

21ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ்- ன் உரிமையாளராகிய ரூப்பர்ட் மர்டாக், ஸ்டார் தொலைக்காட்சி மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் மூலம் இத்தொலைக்காட்சியை தற்போது நிறுவாகித்து வருகிறார்.

இத்தொலைக்காட்சி 1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால் விஜய் தொலைக்காட்சி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இத்தொலைக்காட்சி நிறுவனம் விஜய் மல்லாயா மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் எனக் கைமாறி 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் ஸ்டார் நிறுவனத்தால் வாங்கப் பட்டு ஸ்டார் விஜய் என பெயர் மாற்றப்பட்டது.

நிகழ்ச்சிகள்

விஜய் தொலைக்காட்சியில் பல பிரபலமான நெடுந்தொடர்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுகின்றன. 2015 ஆவது ஆண்டில் நடைபெறும் பதினொன்றாவது உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டிகள் தமிழ் மொழி வர்ணனையுடன் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.

விருதுகள்

  • விஜய் விருதுகள் (2006 - முதல்)
    • ஆண்டுதோறும் தமிழ் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு விஜய் விருதுகள் என்னும் தலைப்பில் 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • விஜய் தொலைக்காட்சி விருதுகள் (2014 - முதல்)
    • ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு விஜய் தொலைக்காட்சி விருதுகள் என்னும் தலைப்பில் 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை விருதுகள் வழங்கப்படுகின்றன.

சின்னம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.