நீலிமா ராணி
நீலிமா ராணி (பிறப்பு: நவம்பர் 6, 1983)[1] இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சின்னத்திரை நடிகையாவார். இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.
நீலிமா ராணி | |
---|---|
![]() | |
பிறப்பு | 6 நவம்பர் 1983 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1992 - அறிமுகம் |
சமயம் | இந்து |
தொழில்
இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். தொலைக்காட்சியிலிருந்து சற்று விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
சின்னத்திரையில்
- 2002-2005 மெட்டி ஒலி
- 2003-2007 தற்காப்பு கலை தீராதா
- 2003-2009 கோலங்கள்
- 2005-2007 என் தோழி என் காதலி என் மனைவி
- 2008 புதுமை பெண்கள்
- 2009-2012 தென்றல்
- 2010-2012 இதயம்
- 2012 பவானி
- 2009-2013 செல்லமே
- 2013- மகாபாரதம்
இது முழுமையானது அல்ல.
திரைப்படம்
- 1992- தேவர் மகன்
- 2001- பாண்டவர் பூமி (திரைப்படம்)
- 2002- விரும்புகிறேன்
- 2003- தம்
- 2005- பிரியசகி
- 2006- இதயத்திருடன்
- 2006- திமிரு
- 2006- ஆணிவேர் (2006 திரைப்படம்)
- 2007- மொழி (திரைப்படம்)
- 2008- சந்தோஷ் சுப்பிரமணியம்
- 2009- ராஜாதி ராஜா
- 2009- சிலந்தி
- 2010- புகைப்படம் (திரைப்படம்)
- 2010- ரசிக்கும் சீமானே
- 2010- நான் மகான் அல்ல (2010 திரைப்படம்)
- 2011- முரண் (திரைப்படம்)
- 2012- மிதிவெடி
- 2012- காதல் பாதை
- 2013- மதில் மேல் பூனை
- 2013- ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
- 2014- பண்ணையாரும் பத்மினியும்
- 2014- அமளி துமளி - படபிடிப்பில்
- 2014- இருவர் உள்ளம் - படபிடிப்பில்
- 2014- வாலிப ராஜா - படபிடிப்பில்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.